சிறப்புச் செய்திகள்

யாழ்.போதனாவில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில்,  அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் இதனால் இரத்த வங்கியில்  அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என ...

மேலும்..

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என ...

மேலும்..

நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்ய அரசாங்கம் தலையிட்டு வருகிறது – பெப்ரல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் தலையிட்டு வருகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். பெப்ரல் அமைப்பு கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது ...

மேலும்..

அத்தியாவசிய பொருட்களின் விலை, சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் -நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருள்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளோம். நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வழங்கியுள்ள ஒத்துழைப்பை வரவேற்கிறோம் என நிதி இராஜாங்க ...

மேலும்..

அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க ஒருபோதும் இடமளியேன் – ஜனாதிபதி

அரசமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க இடமளிக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக மக்களின் வாக்களிப்பு மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் ஒன்றை மாற்றியமைக்க முடியும். ஆனால் வீதி போராட்டங்களில் ஆட்சி மாற்றம் என்பது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

புலனாய்வு தகவல் பரிமாற்றம் மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் – கம்மன்பில

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்' ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார். பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான ...

மேலும்..

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியால் தீர்வுகாண முடியும்! அமைச்சர் பந்துல நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பொருளாதாரக் காரணிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளோம் என போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஹோமாகம பகுதியில் ...

மேலும்..

இலங்கையில் வரி அதிகரிப்பு – நியாயப்படுத்துகின்றது சர்வதேச நாணயநிதியம்

இலங்கையில்  கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள புதிய வரிகளை சர்வதேச நாணயநிதியம் நியாயப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு பல காரணங்கள் உள்ளன  என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் வரிகள் மூலம் அரசாங்கத்தினால் தனது செலவீனங்களை சமாளிக்க முடியாததும் ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளது. உரிய வரிகள் மூலம் ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் இன்று (03) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி சாலையின் வருமானத்தை பாதிக்கும் வகையில் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில்  சேவைகளை  ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புல்மேட்டை ஊடாக திருகோணமலை செல்லும் எமது பேரூந்துக்கு ...

மேலும்..

பிரஜைகளின் தகவல் அறியும் உரிமை தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை TISL நிறுவனம் வரவேற்கிறது

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பாக கோரப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை வலியுறுத்தும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வரவேற்கிறது. சாமர சம்பத் எதிர் இலங்கை பாராளுமன்றம் ...

மேலும்..

பாராளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் : ஜனாதிபதி

பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதை விடுத்து வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை, விமானப்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் ...

மேலும்..

மக்களை தவறான திசையில் வழிநடத்தும் எதிர்க்கட்சிகள் – நாட்டுக்கு ஆபத்தாக முடியும் என்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சர்

அரசியல் சமூக பொருளாதார ரீதியில் நம் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளினதும் சர்வதேச நிதி நிறுவனங்களினதும் அனுசரணைகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க ...

மேலும்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற 4 பஸ்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் சென்ற நான்கு பஸ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் ...

மேலும்..

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்  சிற்றூழியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (03) பிற்பகல் வைத்தியசாலை பிரதான  நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (03) மதியம் 12.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற வரி அதிகரிப்பை நிறுத்து , முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , ...

மேலும்..