சிறப்புச் செய்திகள்

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை!

இந்தனோசியாவின் சுமாத்திராத்தீவில் தற்போது 9.2 அளவிளான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி வரலாம் என்ற சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டிக் கொண்டுள்ளது.

மேலும்..

யாழ்.மாவட்ட முன்னாய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முன்னாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் யாழ். மாவட்ட ...

மேலும்..

எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய ‘சர்வஜன வாக்குரிமை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாத திகதி அறிவிப்பு!

பாராளுமன்றத்தை மார்ச் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (01) பிற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ...

மேலும்..

T-56 துப்பாக்கி, 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்து T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை வீரர் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்..

யாழில் 11 சந்தை வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை (தராசுகள்) பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் (புதன்கிழமை) பண்ணை மீன் சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு மீன் சந்தை மற்றும் ...

மேலும்..

15 சதவீத பெண்களும், 6.3 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிப்பு!

இலங்கை சனத்தொகையில் 15 சதவீத பெண்களும், 6.3 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார். உடல் ...

மேலும்..

நல்லூரில் வாள் வெட்டு – பிரதான சந்தேகநபர் கைது!

சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பதினெட்டாம் திகதி மகாசிவராத்திரி தினத்தன்று அதிகாலை வேளை நல்லூர் பின் வீதியில் ...

மேலும்..

நன்னீர் மீன் வளர்பபு எனும் போர்வையில் மணல் கொள்ளை – மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்

நன்னீர் மீன் வளர்பபு எனும் போர்வையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பேராலை கிராம மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கிராமத்தில் அமைந்துள்ள புதுக்காட்டுக்குளத்திலிருந்தே அதிகளவான மணல் ...

மேலும்..

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் – சபாநாயகர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல் மற்றும் டான் கிரின்விக்ஸ் ஆகியோர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை ...

மேலும்..

வவுனியாவில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம்!

தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வீதிநாடகம் ஒன்று வவுனியா பழையபேருந்து நிலையத்தில் இன்று காலை இடம்பெற்றது. தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்ப்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பான முழுமையான உள்ளடக்கங்கள் பொதுமக்களிற்கு தெளிவு படுத்தப்பட்டது. அது தொடர்பான ...

மேலும்..

யாழ்.மாநகர சபை குழப்பங்களை திசை திருப்பவே எம்மீது வீண் பழி சுமத்தினார்கள்: கு. விக்னேஷ்

யாழ்ப்பாண மாநகர சபையின் குழப்பங்கள் திசை திருப்பவே, வர்த்தக கண்காட்சி நடத்துபவர்கள் வரி செலுத்தவில்லை என எம் மீது அபாண்டமான பழியை சுமத்தியுள்ளனர் என யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத் தலைவர் கு.விக்னேஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற ஊடக ...

மேலும்..

சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை

இலங்கை முன்னெடுக்கும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியதவி வழங்குமாறு, இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பிலே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் ...

மேலும்..

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் உள்ள சிற்றுண்டியில் திடீர் சோதனை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலிலுள்ள சிற்றுண்டிசாலைக்கு எதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்ல மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் தரித்துநின்ற ரயிலில் உள்ள சிற்றுண்டிசாலை பொதுச்சுகாதார பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மாலை திடீர் சோதனையிடப்பட்டது. இதன்போது அங்கு மனித பாவனைக்கு ...

மேலும்..

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று பாரிய பண மோசடி – பணியகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று (புதன்கிழமை) பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபா மோசடி செய்த சம்பவத்தில் முறைப்பாடுகளை ஏற்க வேண்டாம் என அமைச்சரின் தொடர்பு அதிகாரியால் வழங்கப்பட்ட உத்தரவு ...

மேலும்..

இலங்கைக்கு 1,500 பயிற்சி இடங்களை வழங்கும் இந்திய பாதுகாப்புப் படைகள்: வினோத் கே ஜேக்கப்

இந்திய பாதுகாப்புப் படைகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 பயிற்சி இடங்களை இலங்கைக்கு வழங்குகின்றன. அவற்றுக்கு ஆண்டுதோறும் 70 லட்சம் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் சிறப்புத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படுவதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொழும்புக்கு வருகை ...

மேலும்..