சிறப்புச் செய்திகள்

தோட்ட தொழிலாளர்களை மனித இயந்திரமாக்கி மகிழ்வது சமூகத்தை அவமதிக்கும் செயல். அருட்தந்தை மா.சத்திவேல்

தோட்ட பெண் தொழிலாளர்கள் மத்தியில் போட்டி நிகழ்த்தி அவர்களை மனித இயந்திரமாக்கி மகிழ்ந்திருப்பது பெண்களை இழிவுபடுத்தும் செயல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலையக சமூகத்தையும் அவமதிக்கும் செயலுமாகும் என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ...

மேலும்..

இலங்கை திரும்பிய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்!

வெளிநாட்டில் இருந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தற்போது இலங்கை திரும்பியுள்ளார் எனத் தெரியவருகிறது. அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது அலுவலகத்துக்கு வந்தார் எனவும் , சீல் வைக்கப்பட்டுள்ளமையால் உள்ளே செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், பெரும்பான்மையான பொதுமக்களை ஒடுக்கும் ...

மேலும்..

மலையக தமிழ் சமூகத்தின் நல்வாழ்வில் பிரித்தானியாவுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது – மனோ கணேசன்

உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக பிரதி பணிப்பாளர் மாயா சிவஞானத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் ...

மேலும்..

தொழிற்சங்கத் தலைவர்கள் பயணம் செய்ய எரிபொருள் வழங்குவது ஜனாதிபதியே! வஜிர அபேவர்தன

போராட்டங்களை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்கள் பயணங்களை மேற்கொள்ளத் தேவையான எரிபொருள்களை ஜனாதிபதியே வழங்குகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வந்த வரிசைகளை இல்லாதொழித்து, போக்குவரத்து செய்ய ஜனாதிபதி எரிபொருள் வழங்கியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் ...

மேலும்..

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்…!

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் சட்டம் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அறிந்துகொள்ள முடியும் ...

மேலும்..

ரணிலால் ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது- ஜே.வி.பி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முடியாது என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறியவை வருமாறு - தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக ரணில் நடத்தும் நாடகமே சர்வ கட்சிப் பேச்சு. அவரால் அரசியல் ...

மேலும்..

ஜனநாயகத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – சரித ஹேரத்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்புக்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பி வைத்த கடிதத்தை சபாநாயகர் திறைசேரிக்கு அனுப்பி வைத்துள்ளார் என அறிய முடிகிறது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ...

மேலும்..

போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் – சம்பிக்க

தமிழர் நலனுக்காக கரிசனை கொள்வதாகக் குறிப்பிட்டு எம்மை இனவாதிகளாகச் சித்திரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களைப் படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீது சுமத்தியது. ஜனநாயகப் போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் நாட்டில் ...

மேலும்..

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – பெப்ரல்

தேர்தலுக்காக வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை விடுவிக்குமாறு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று அனுமதிக்கப்படவேண்டும். அத்துடன் நாடாளுமன்ற அதிகாரத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ...

மேலும்..

கண் சத்திரசிகிச்சைகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்த அவுஸ்திரேலியாவிடமிருந்து நிதியுதவி

பதுளை, இரத்தினபுரி , மட்டக்களப்பு, களுபோவில, தங்காலை வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்த ஆஸ்திரேலியாவிடமிருந்து 99.42 மில்லியன் ரூபா நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் 'அனைவருக்கும் பார்வை' சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்தால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைனளில் கண் ...

மேலும்..

அனைவரும் ஒன்றுபடுவது அவசியம் – அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியிலான சவால்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குமிடத்து முன்னெப்போதையும்விட இப்போது சுபீட்சமான இந்தோ - பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கவேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கும் கடனுதவி குறித்து உன்னிப்பாக அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி

இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி தொடர்பில் கண்காணித்துவருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுக்குழுவின் தலைவர் கிரேஸ் ஆசீர்வாதம் ஆகியோருக்கு ...

மேலும்..

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ச்சியாக ஆதரவு

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் ...

மேலும்..

வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ; இலங்கை இணங்கவில்லை என்கிறது அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்துடனான அண்மைய பேச்சுகளின் போது மீண்டும் 2.5 சதவீதத்தால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தால் வட்டி வீதங்களைக் குறைக்க முடியாது எனத் தெரிவித்த ...

மேலும்..

இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது ? – தேர்தல் ஆணைக்குழுவின் கடிதத்திற்கு அமைச்சர் பந்துல பதில்

அரசாங்கத்திடம் நிதியிருந்தால் தேர்தலுக்காக அதனை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது? மார்ச்சில் வருமானத்துக்கும் செலவிற்குமிடையிலான இடைவெளி 2300 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு தேர்தலுக்கு நிதியை வழங்குவது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன ...

மேலும்..