சிறப்புச் செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலா் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனா். இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவா்களை தடுக்க முயன்றபோது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனா். இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட காவலாளி அவா்களை தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடா்பாக  பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

மேலும்..

கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது – டக்ளஸ் திட்டவட்டம்

இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எவ்வாறான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், குறுகிய ...

மேலும்..

குளிக்க சென்ற இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் பிரதேசத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் ஆற்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நீராட சென்ற இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா டெஸ்போட் மேல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகேந்திரன் சதிஸ்குமார் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வருவதாக தகவல்!

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 28 ...

மேலும்..

லால்காந்தவும் , சுனில் ஹதுன்நெத்தி தியும் பொலிசுக்குக்கு வாக்குமூலம் கொடுக்கவில்லை இதற்கு அனுர திசாநாயக்க பதில் கொடுப்பாரா? ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சவால்!

வசந்த முதலி விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும்   பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சொன்ன லால் காந்தவிடமும்  ஹதுன்நெத்தியிடமும்  பொலிஸில் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என  முடிந்தால் அனுர  பதில் சொல்லட்டும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திஸ்ஸமஹாராம தொகுதி ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது – சம்பிக்க

ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பல மடங்கு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இனிமேல் 69 இலட்சம் என்ற கதை இந்நாட்டில் செல்லாது என்றும் கூறியுள்ளார். தமது வாழ்க்கையை அழித்தமைக்கு ராஜபக்சக்களே ...

மேலும்..

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் இந்த வாரம்!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், விண்ணப்பங்கள் மீதான பகுப்பாய்வு தற்போது இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய புதிய ...

மேலும்..

ரணில் மக்களின் உரிமைகளை தடுக்கிறார் – எஸ் சிறிதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாதத் தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளைத் தடுத்து வருகின்றமை மிக மோசமானது. நாடாளுமன்றத்தில் கோமாளிகளின் தலைவனாக அவர் தென்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்குக் ...

மேலும்..

13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது- விக்னேஸ்வரன்

13ஆம் திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதில் தாம் தெளிவுடன் உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னதாக சி.வி விக்னேஸ்வரன் தமது அரசியல் கொள்கையில் உறுதியானதும் தெளிவானதுமான நிலைப்பாட்டுடன் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு சஜித் கண்டனம்!

தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். (செய்திப் பின்னணி) தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக ´கொழும்பிற்கு ...

மேலும்..

நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்ல முடியாத ரணில் இன்று டுவிட்டரில் விளக்கம்:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல முடியாத ரணில், இன்று ருவிட்டரில் விளக்கம் கொடுக்கின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணின் தேர்தல் பரப்புரை முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ...

மேலும்..

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை ஈட்டிக்கொடுக்க விசேட திட்டம்

நாட்டிற்கு டொலர்களை சம்பாதிப்பதற்காக எச்.ஏ.எஸ்.எஸ் வகைகளை கொண்ட ஆஸ்திரேலிய வெண்ணெய் பழம் இலங்கையில் விவசாய கைத்தொழில் பயிராக விரிவுபடுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டமான விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெண்ணெய் பழத்திட்டத்தின் ...

மேலும்..

உகண்டாவில் ராஜபக்சர்களின் சொத்து – பரபரப்புத் தகவலை வெளியிட்ட நாமல்

ராஜபக்ஷர்கள் விமானத்தில் டொலர்களை நிரப்பி உகண்டாவிற்கு கடத்தினர் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி குற்றச்சாட்டை யாராவது நிரூபித்து அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவந்தால், அந்தப் பணத்தில் இலங்கையில் உள்ள அனைத்துக் கடன்களையும் ...

மேலும்..

இலங்கைக்கு இரகசியமாக கொண்டு வரப்பட்ட அதிசொகுசு வாகனம் மாயம்! பெருந்தொகையை வரியாக செலுத்திய அரசாங்கம்

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின் பாவனைக்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் டொயோட்டா ப்ரியஸ் ஹைபிரிட் அதிசொகுசு வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் 2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கப்பதிவேடுகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதற்கான சுங்க ...

மேலும்..

அரசாங்க காணியை முறைகேடாக குத்தகைக்கு விட்ட மொட்டுக்கட்சி முக்கியஸ்தர் கைது

அரசாங்க காணியொன்றை முறைகேடான வழியில் குத்தகைக்கு விட்ட மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளத்தில் வசித்து வந்த மொட்டுக் கட்சியின் ஆனமடுவை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி பிரதேச சபை உறுப்பினர் தனது ...

மேலும்..