சிறப்புச் செய்திகள்

அரச ஊழியர்கள் விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வது குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை ...

மேலும்..

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒரு மாதத்திற்கு ...

மேலும்..

தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்தி வைக்க எந்தத் தேர்தலும் இல்லை.. ஜனாதிபதி தெரிவிப்பு!

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முன்னுரிமையாக கொண்டு தான் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, "இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, நாட்டுக்கு அரிசி வாங்குவதற்கு 20 பில்லியன் ...

மேலும்..

தனுஷ்க குணதிலாவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவு!

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 31 வயதான குணதிலக்க ...

மேலும்..

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டாலும் வரிக்கொள்கையில் மாற்றங்களை செய்யப்போவதில்லை – செஹான்

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும் அரசாங்கம் வரிக்கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாது என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் தனது புதிய வரிக்கொள்கையை மாற்றவேண்டும் என தொழிற்சங்கங்களும் தொழில்சார் அமைப்புகளும் காலக்கெடு விதித்துள்ள நிலையிலேயே இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், அரசாங்கம் ...

மேலும்..

முஜிபுர் ரஹ்மான் பலிக்கடாவாகப் போவது எனக்குத் தெரியும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டாம் என அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு தான் அறிவுறுத்தினார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தவர் தானே எனக் கூறிய ஜனாதிபதி, அவர் பலிக்கடா ...

மேலும்..

ஜனாதிபதி மொட்டுக்கு வழங்கிய 03 வாக்குறுதிகள் – வௌிப்படுத்திய சஜித்!

தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை ரீதியான வாக்குறுதிகளின் பிரகாரமே தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ளார் ...

மேலும்..

காணிகளை கையேற்க தயக்கம் காட்டும் பொது மக்கள்!

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் ...

மேலும்..

442 மில்லியன் முதலீட்டில் மன்னார் , பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அதானி நிறுவனத்திற்கு அனுமதி

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 44 கோடியே 20 லட்சம் டொலர் முதலீட்டில் 350 மெகாவோல்ட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு இலங்கை முதலீட்டு சபையால் இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

தனது பேஸ்புக் காதலனுக்கு 7 வயது மகளை தாரை வார்த்த தாய் கைது – கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்

ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் சேட்டைகள் செய்த ஒருவரும் சிறுமின் தாயும் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது - மேற்படி சம்பவத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட பெண்ணின் ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் பல கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தை அதிகரி , வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தைக் குறை , ஊழியர் பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு ...

மேலும்..

மரண தண்டனை குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!

இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு 2019 ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச வைத்தியசாலைகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் ...

மேலும்..

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானிப்படுத்த வேண்டும் – வடிவேல் சுரேஷ்

தோட்டத்தொழிலாளர் சம்பளத்தை 3250 ரூபா ஆக நிர்ணயித்து வர்த்தமானிப்படுத்தவேண்டும்! வடிவேல் சுரேஷ் கோரிக்கை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3 ஆயிரத்து 250 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கொழும்பு துறைமுக ...

மேலும்..

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது : வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே எஞ்சியுள்ளது -மஹிந்த தேசப்பிரிய

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதனை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது என முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - எரிபொருள் தட்டுப்பாடு , வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..