சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி பாராளுமன்றத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் இறுதித் தீர்வு நாடாளுமன்றத்திடம் என குறிப்பிட்டு ஜனாதிபதி நாடாளுமன்றத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார். நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் எவையும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமல் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்துக்கு பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விரிவான பேச்சுகளை முன்னெடுக்காமல் நிபந்தனைகளுக்கு எம்மால் ...

மேலும்..

அமெரிக்க உயர் மட்ட பாதுகாப்பு குழுவின் விஜயம் குறித்த தகவல்களை நான் அறியேன் – அலி சப்ரி

அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்கள், எந்த விடயம் தொடர்பில் பேச்சில் ஈடுபட்டார்கள் என்பதை நான் அறியவில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தேசிய சுதந்திர முன்னணியின் ...

மேலும்..

தமிழர்களின் அமைதிப்போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டிக்குமாறு கனேடியத் தமிழர் தேசிய அவை சர்வதேசத்திடம் வலியுறுத்தல்

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமை தொடர்ந்து முடக்கப்பட்டுவருவதைக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியிருக்கும் கனேடியத் தமிழர் தேசிய அவை, தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கினால் மட்டுமே இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதி உருவாவதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாகக் கனேடியத் தமிழர் தேசிய அவையால் ...

மேலும்..

மக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றம் பாதுகாக்கும் – கிரியெல்ல நம்பிக்கை

அரசமைப்பிற்கு அமையவே முத்துறைகளும் செயற்பட வேண்டும். திறைச்சேரியின் செயலாளர், அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோர் அரசமைப்பைப் புறக்கணித்து அமைச்சின் சுற்றறிக்கையை பின்பற்றி தேர்தல் பணிகளுக்கு தடையேற்படுத்தியுள்ளார்கள். நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு தனது வகிபாகத்தை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதா ? – ஐக்கிய தேசியக் கட்சி

தேர்தல்கள் ஆணைக்குழு தனது வகிபாகத்தை உரிய முறையில் நிறைவேற்றி உள்ளதா என்பதை நாடாளுமன்றமும் சகல மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புடன் ஆராய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்பட முடியாவிட்டால், ...

மேலும்..

ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டுமானால் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன்

நாட்டில் சர்வாதிகாரம் இல்லாத ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டுமாக இருந்தால் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசியல் ரீதியாகத்தான் பிற்போடப்பட்டுள்ளது அனைவருக்கும் தெட்டத்தெளிவாகத் தெரிந்த விடயம். அத்துடன் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்க விசேட குழுவொன்று ...

மேலும்..

வலி. வடக்கில் மீள் குடியிருக்கும் மக்களுக்கு உதவுமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை! யாழ். அரச அதிபர் சிவபாலசுந்தரன்

யாழ். வலி. வடக்கில் மீள் குடியிருக்கும் மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளுமாறு மேற்குலக சர்வதேச நாடுகளிடமிருந்து உதவிகளைக் கேட்டிருக்கின்றோம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 'வலி. வடக்கில் மீள் குடியேறியுள்ள மக்களின் ...

மேலும்..

சாவகச்சேரி இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு 50 இற்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள் , புகைகள் (ஸ்மோக்) ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கழிவுகள் தேக்கமாம்?

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாள்களாகத் தேங்கி கிடக்கின்றன என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய ...

மேலும்..

வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் களுத்துறை சுற்றுலா விடுதியில் மீட்பு!

களுத்துறை வடக்கு சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டுகுருந்த முகாமுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கைதான முப்பது வயதுடைய சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ...

மேலும்..

இலங்கைக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காமால் போகும் வாய்ப்பு! விஜித ஹேரத் எச்சரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற எந்தவொரு சர்வதேச ஆதரவும் இலங்கைக்கு கிடைக்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

மேலும்..

கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வுகளைகாண புதிய ஒப்பந்தம் – அலி சப்ரி

கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்தோடு அனுமதிப்பத்திர முறைமையை உருவாக்கும் யோசனை இருப்பதாகவும் அது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ...

மேலும்..

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு தீர்வுகாண விசேட நடவடிக்கைகள் தேவை -சார்ள்ஸ் நிர்மலநாதன்

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் வடக்கு மீனவர்கள் வாழ்வாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரச்சினைக்கு கடற்றொழில் அமைச்சரால் நிரந்தர தீர்வைக் காண முடியாது என்பது எமது நிலைப்பாடாகும். ஆகவே காலம் காலமாகத் தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிவிவகாரத்துறை ...

மேலும்..

ஹொரணை ஒலபொடுவ ரஜமஹா விகாரை வருடாந்த நவம் மஹா பெரஹரா ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹொரணை ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹராவின் ஆரம்ப நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, தலகல விபஸ்ஸனா தியான நிலையத்தின் தலைவர் ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண, உடுவே ஹேமாலோக நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார். ...

மேலும்..

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்ட சாணக்கியன்!

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகரின் அறிவிப்பின் கீழ் பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார். இதற்கமைய கோப் குழுவிற்கு ...

மேலும்..