சிறப்புச் செய்திகள்

26 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம்!

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி ...

மேலும்..

A/L பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பா?

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேகமாக நாட்டை விட்டு வெளியேறத் ...

மேலும்..

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் நமது ஆட்சி வரும் – அநுரகுமார திஸாநாயக்க

தொழில் வல்லுநர்கள் உள்ளிட் அனைத்து தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். உணர்ச்சியற்ற தலைவர்கள் ...

மேலும்..

மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் பாரிய ஊர்வலம்

இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து ஹட்டன் மல்லியப்பூ சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1,000 க்கும் மேற்பட்டோர் ...

மேலும்..

ஜனக ரத்நாயக்கவை நீக்க குற்றப்பத்திரிக்கை தயார்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்வதுடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது ...

மேலும்..

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவது குறித்து அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற விசேட ...

மேலும்..

சீனாவில் இருந்து 10,000 தண்டவாளங்கள் இறக்குமதியாகிறது!

ரயில் தடம்புரள்வுகளை குறைக்கவும், தொடரூந்து சேவைகளை மேம்படுத்தவும், 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக தொடருந்து தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த ...

மேலும்..

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் தயார் நிலையில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை முடிக்க எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே ...

மேலும்..

யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) யாழ்.சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 5 மணிக்கு யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கூட்டத்தில் தமிழ் ஈழ ...

மேலும்..

13ஐ ஒழிக்கவேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டும்! நான் அதைச் செய்வேன் என்கின்றார் ஜனாதிபதி

"அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதனை இல்லாது ஒழிக்கவேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றால் அதனை நீக்கவேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் நேற்று மாலை கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் அவர் ...

மேலும்..

14 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் !

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தற்போது ...

மேலும்..

சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பட்ரிசியா ஸ்கொட்லண்ட்!

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த வாரமளவில் சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ...

மேலும்..

பிள்ளையானுக்கு முதுகெலும்பு இருந்தால் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சாணக்கியன் சவால்

பிள்ளையானுக்கு முதுகெலும்பு இருந்தால் உண்மையை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நேற்றைய தினம் ஒரு செய்தியை பார்க்கக் கூடியதாக ...

மேலும்..

இலங்கை வாழைப்பழங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி !

இலங்கையில் இருந்து சில வாழை இனங்களை தெரிவு செய்து சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தனர். இலங்கையில் விளைவிக்கப்படும் பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆரம்ப கலந்துரையாடல் ...

மேலும்..