சிறப்புச் செய்திகள்

பெப்ரவரி முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ள கட்டணங்கள்

கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் செய்த கட்டணங்கள் திருத்தப்படவில்லை ...

மேலும்..

பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சாத்தியமான தீர்வுகளைப் பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ...

மேலும்..

நெதர்லாந்துத் தூதுவர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பு!

இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் போனி ஓபார்க் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் இச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும்..

9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன ...

மேலும்..

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால் நியமனங்கள் செய்யப்படவுள்ளன. அரசியலமைப்பு பேரவை நாளை (25) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை!

2 நாட்களுக்குள் பாலத்தினை அமைத்து தர முடியாத இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் ...

மேலும்..

தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் தமிழரசு பெயர் திட்டமிட்டு மறைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய் கிராமசபையின் முன்னாள் தலைவருமான அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலி.தெற்கு பிரதேசசபையின் முன்றிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

கல்முனை விடயத்தை எம்முடன் பேசாது தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியாது

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இறுமாப்புடன் செயற்படுகின்றது.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது  என முன்னளர்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்   கல்முனை பிராந்திய இணைப்பாளரும்  ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான  அஹமட் புர்க்கான் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் நேரம்- ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   " இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன்கருதி அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று  பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ்  தலைமையில் நடைபெற்றது.   இவ்வருடம் “உன்னத தரத்தை நோக்கிய வீறுநடை என்ற மகுட வாசகத்தை ...

மேலும்..

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு !

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். இதன்படி, ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் ...

மேலும்..

அடுத்த மாதம் எரிவாயு விலை அதிகரிக்கும்?

சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்திற்குள் 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இந்த வாரம்!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக ...

மேலும்..

எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் சரியான புரிதல் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் ...

மேலும்..

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் அனல்மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். போதியளவு நெப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் ...

மேலும்..