சிறப்புச் செய்திகள்

வடக்கின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சி தருகிறது! பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி கருத்து

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு ...

மேலும்..

அமெரிக்க துணைச் செயலர் – சுமந்திரன் எம்.பி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக தாம் கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலர், அஃப்ரீன் அக்தருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் ...

மேலும்..

கொழும்பில் உதயமாகும் தமிழர் கல்வி மேம்பாட்டுக் கழகம்

தமிழ் சமுதாயத்தின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில்  தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம்  எனும் அமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனினால் கொழும்பில்  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது  தமிழர் கல்வி மேம்பாட்டு கழகத்தின் போசகராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும், தலைவராக ...

மேலும்..

வெறுப்பை நீக்கி புதிய வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அனுப்ப வேண்டும் – வஜிர

வாக்காளர்களின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கியே வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். வெறுப்பு, கோபம், பொறாமை இல்லாத வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது ஒரு நல்ல நாட்டை ...

மேலும்..

பாதாளக் குழுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது!

நாட்டில் பாதாளக் குழுவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இலங்கை வரலாற்றில் இவ்வாறு பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படாதமை ...

மேலும்..

மொரட்டுவையில் வீதிக்கு வந்த முதலையால் பரபரப்பு!

மொரட்டுவ, லுனாவ பகுதியில் சுமார் 8 அடி நீளமான முதலையொன்று இன்று அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும், பொலிஸாருக்கும், தெரியப்படுத்திய போதும் இது வரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி  தெரிவித்துள்ளனர்.

மேலும்..

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபை – இலங்கை முன்மொழிவு

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபையை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் அஹமட் பின் அலி சயேக் ஆகியோருக்கிடையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் ...

மேலும்..

கோட்டாவால் தான் நாடு சீரழிந்துள்ளது ஆஷூ மாரசிங்க சாட்டை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஸபக்சவினால் தான் நாடு சீரழிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் ...

மேலும்..

புலி அமைப்பின் வாலை மட்டுமே எம்மால் அழிக்க முடிந்தது : சரத் வீரசேகர கவலை!

தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்குட்படுத்த முடிவு! அமைச்சர் ராகவன் அதிரடி

'பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக' உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளைத்  தடுக்கும் விதமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - விடுதிகளில் நள்ளிரவு 12 ...

மேலும்..

தேசிய கீதம் தமிழில் பாடாததால் கவலை! அமைச்சர் டக்ளஸூக்கு வந்த மொழிப்பற்று

''யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிக்கின்றது' என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (என்.வி.கியு) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை யாழ். சாவகச்சேரி பொன்விழா ...

மேலும்..

நடிகர் ஜக்சனின் பூதவுடலுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!

மறைந்த நடிகர் சகலகலா சக்திய ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் கடவத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை பொரளையில் உள்ள ஜெயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் ...

மேலும்..

ஓட்டோ உரிமையாளர்கள் யாழில் கவனவீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை காலை ஓட்டோ உரிமையாளர்கள் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பஸ் நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ். நகரில் முடிவடைந்தது. அண்மைய நாள்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் ஓட்டோ சேவையை மக்கள் பயன்படுத்தி வருவதன் ...

மேலும்..

10 வயது சிறுமி விபத்தில் பலி!

அனுராதபுரம் தலாவ பகுதியில் எரிபொருள் ஏற்றிவந்த பௌஸர் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 10 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார். கொழும்பு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ...

மேலும்..

இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு விமானநிலையத்தில் பெரும் உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ...

மேலும்..