சிறப்புச் செய்திகள்

பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி தார்மீக பொறுப்பை நிறைவேற்றுங்கள் – ஜனாதிபதி

அரசாங்கத்தின் மீதுள்ள அனைத்துப் பொறுப்புக்களையும் கைவிட்டு, அடுத்த தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றும் பாரம்பரிய அரசியல் முறைகளை புறந்தள்ளிவிட்டு, நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையேற்றம் காரணமாக இன்று ...

மேலும்..

போதைப்பொருள் பாவிப்போரை பரிசோதிக்க அதிநவீன உபகரணம்!

போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலம் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை ...

மேலும்..

சீனாவிடம்பணம் கேட்கும் கிழக்கு மாகாண ஆளுநர்

இலவச அரிசியை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்வரும் பெரும்போகம் மற்றும் முந்திய பருவத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு சீன அரசாங்கத்திடம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அண்மையில் ...

மேலும்..

16 பில்லியன் ரூபா சீனி வரி மோசடி தொடர்பில் கோட்டாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானம்!

சீனி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில  பத்திரிகையொன்று  இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அப்போது வர்த்தக அமைச்சராக ...

மேலும்..

பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்டுவதற்கு முடிவு..

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் ...

மேலும்..

தமிழர் தாயக புற்றுநோய் வைத்தியசாலைக்கு கனேடிய தமிழர்களால் மருந்துகள் வழங்கிவைப்பு..

கனேடிய தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது.   இலங்கையின் மோசமான நிதிச் சரிவால் உயிர்காக்கும் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு சஜித் வழங்கிய வாக்குறுதி..! நடைமுறையாகவுள்ள திட்டம்

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் ...

மேலும்..

தமிழர் தரப்புடன் ரணில் இன்று திரும்பவும் பேச்சு!

தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை இன்று மாலை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார். இந்தப் பேச்சு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 6 மணி முதல் நடைபெறும். அரசு தரப்பில் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்..! சஜித் சீற்றம்

சமகாலத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக பேசப்படுவதோடு, இதற்குக் காரணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்களின் வரிப்பணத்தில் சிறைச்சாலைகளில் சுகபோகம் காண்பதுதான் எனவும், இவ்விடயத்தில் மக்களும் போலவே அரசாங்கமும் முடிவெடுக்க வேண்டுமெனவும், தாராளமயம், கம்யூனிஸ்ட், ...

மேலும்..

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் யாழ் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்..

யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்று(19) இரவு 8மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர். மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன ...

மேலும்..

மறைமுகமான மத்தியஸ்தம் சொல்ஹெய்ம் முன்னெடுப்பு – ரணில், சஜித், சம்பந்தனுடன் சந்திப்பு

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் சர்வகட்சி கலந்துரையாடலுக்கான மறைமுக மத்தியஸ்தராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது நோர்வே சார்பில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றியிருந்தவர் எரிக் ...

மேலும்..

23, 24ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்

எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி சிரேஷ்ட பிரஜைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி சிறுவர்களும் இலவசமாக மிருகக்காட்சி சாலையை பார்வையிட ...

மேலும்..

University second Form Registration!!

2021 க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குப் பின்னர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் நாளை முதல், அவர்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யலாமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். .இவ்வாறு தகுதி பெறும் மாணவர்களுக்கு நாளை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் ...

மேலும்..

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் (18), கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில், கட்சியின் தலைவர் மாவை.சோ சேனாதிராசா தலைமையில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர். சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய இந்நிகழ்வில், நாடாளுமன்ற ...

மேலும்..