சிறப்புச் செய்திகள்

மூன்று குடும்பங்களின் தேவைக்காக. மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்..

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை அளிப்பதாக பூநகரி சிறீ முருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன் கோரிக்கை ...

மேலும்..

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில்

பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதற்கமைய 2021 (2022) ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் உயர்தரப் ...

மேலும்..

திருகோணமலையிலிருந்து இயந்திரப்படகில் அவுஸ்திரேலியா சென்ற 20 பேர் கைது

திருகோணமலையில்  இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று (5) திங்கட்கிழமை அதிகாலையில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கiமைய சம்பூர்  பரப்பில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 ...

மேலும்..

பாடசாலை சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து 07 பக்கெட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 போதைவில்லைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சிற்றுண்டிச்சாலையை நடத்திச்சென்ற 42 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

ஜஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த காவல்துறை அதிகாரி கைது!

ஜஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரும் ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று முன்தினம் (3) இடம்பெற்றுள்ளது. தும்மல்லசூரிய காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, ...

மேலும்..

மொட்டு கட்சி அமைச்சர்களுக்கு ரணில் அதிரடி உத்தரவு

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு உண்மையைக் கூறுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஏற்பாட்டில் ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கான சிநேகபூர்வ சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிராமங்களில் கிளைச் சங்கங்களை ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி விதிக்கப்படும் அல்லது பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற வதந்தி பொய்யானது என இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வரி விதிக்கப்படாது, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்கள் ...

மேலும்..

பல்கலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர் விபரம் வெளியானது – புதிதாக நான்கு பீடங்கள் உருவாக்கம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகளின்படி இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயத்தை தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,   2021 ஆம் ...

மேலும்..

சதொசவின் மாத வருமானம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச நிறுவனம், தேவையான வசதிகளை செய்து கொடுத்து, விநியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி 57000 இலட்சம் மாதாந்த வருமானம் பெறும் நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும், 4000 பணியாளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்டு ...

மேலும்..

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு அட்டவணை வெளியீடு!

இன்றைய தினத்திற்கான (5) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட ...

மேலும்..

மூன்று மடங்காக அதிகரிக்கும் மற்றுமோர் கட்டணம்! வெளியான புதிய தகவல்

2023 க்கான பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் ...

மேலும்..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து இரணைமடு பகுதியில் விபத்து! (படங்கள்)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. வைத்தியசாலையில் அனுமதி விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ...

மேலும்..

நாட்டின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க வடக்கு-கிழக்கு விவசாய நிலங்கள் போதும்-அங்கஜன் எம்.பி

சாவகச்சேரி நிருபர் நாட்டில் நிலவி வருகின்ற உணவுப் பற்றாக்குறையை போக்க வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாய நிலங்கள் போதும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் ...

மேலும்..

கொட்டுகிறது டொலர் மழை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஓரளவு ஸ்திரமான நிலைக்கு வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை ஒவ்வொரு மாதமும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் ...

மேலும்..

ராஜிதவுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி?

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்தக வியாபாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட மாநாட்டில் சங்கத்தின் தலைவர் நந்திக கங்கந்த இதனைத் தெரிவித்தார். மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியை ராஜித சேனாரத்ன பொறுப்பேற்கவுள்ளதாக ...

மேலும்..