சிறப்புச் செய்திகள்

இராணுவ அதிகாரியை நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும்- சார்ள்ஸ்

இராணுவ அதிகாரியொருவரை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா ஈச்சங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளனர்- அநுர

நாட்டில் மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளதாக தேசிய மக்கள்  சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சகோதரத்துவ தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அநுர குமார திசாநாயக்க மேலும் ...

மேலும்..

குருபரன் மீதான நடவடிக்கை வெட்கப்பட வேண்டிய ஒன்று! – முன்னாள் எம்.பி. சரவணபவன் சாட்டை

"யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமார வடிவேல் குருபரன் மீதான நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனங்களிலும் கடும் வேதனையை உண்டாக்கியுள்ளது. பல்கலைக் கழகச் சமூகத்தை எண்ணி வெட்கித் தலைகுனியும்படியாக வைத்துள்ளது." - இவ்வாறு தெரிவித்தார் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதே அரசாங்கத்தின் திட்டம் – ஆனல்ட்

தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாத்திரமே வழங்க வேண்டும். அதுவே தமிழ் தமிழ் இனத்தின் விடிவிற்கு வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார். புத்தூர் ஆவரங்கால் ...

மேலும்..

தமிழர் பிரதேசங்களிலேயே தமிழர்களை சிறுபான்மையினராக்கும் முயற்சி நடக்கிறது- சத்தியலிங்கம்

வன்னி தேர்தல் தொகுதி உட்பட தமிழர் பிரதேசங்களில் தமிழர்களின் இனப் பரம்பலையும் இன விகிதாசாரத்தினையும் மாற்றி இந்த பிரதேசத்தில் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வருகின்ற தமிழர்களை சிறுபான்மையினராக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ...

மேலும்..

இதய சுத்தியுடன் கை சுத்தமாக மக்களுக்கு சேவை செய்துள்ளேன் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படபோகின்றதா ஆக்கிரமிக்கப்படபோகின்றதா என்பதனை 5 ஆம் திகதி வீட்டுக்கு பக்கத்தில் இடும் புள்ளடியிலேயே உள்ளது என வேட்பாளர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் 31ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடு – மகேசன்

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் 31ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மகேசன்  தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட  செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான ...

மேலும்..

எமது மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எனது இலக்கு!

எமது மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே தனது இலக்காகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன், பெருந்தோட்டங்களை தோட்டக் கம்பனிகள் மேலும் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கேட்கின்றன என்றும் இதற்கு உடன்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்கரப்பத்தனை எல்பியன் ...

மேலும்..

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் – அமைச்சரவையின் தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் நிலவும் அனைத்துவித முரண்பாடுகளையும் தீர்க்கும் வகையில் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய அரசு ஊழியர்களது சகல சம்பள முரண்பாடுகளும் தேசிய சம்பளம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி ...

மேலும்..

அமைதியான தேர்தலுக்காக கஃபே அமைப்பின் கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டம் ஆரம்பம்!

அமைதியான தேர்தலுக்காக மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தை கஃபே அமைப்பு  இம்மாதம் 24ஆம் திகதிமுதல் நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆரம்பிக்கவுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று ( வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சித்திட்டமானது 24ஆம் திகதி வடக்கு ...

மேலும்..

போராட்டத்தினை பலவீனப்படுத்தியது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்க கருணா முயற்சி !

விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தி தோல்வி அடையச்செய்தது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்கும் வகையிலேயே கருணாவின் பிரச்சாரம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில், இன்று (வியாழக்கிழமை) காலை அவரது அலுவலகத்தில் ...

மேலும்..

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்நிலையில், சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும் விபத்துக்களை ...

மேலும்..

சிங்கள, பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெறுகிறது: 1983 ஜூலை சூழல் நிலவுகிறது- சி.வி.

நிறைவேற்று ஜனாதிபதி தெரிவுக்காக கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலின் ஊடாக சிங்கள, பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுக் காணப்படுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்தனர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை சந்தித்துக் கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ். நல்லூரில் அமைந்துள் நல்லை ஆதீனத்தில் ...

மேலும்..

மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை – ஸ்ரீதரன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக ...

மேலும்..