சிறப்புச் செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்பிக்கவிற்கு அழைப்பாணை!

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக விண்ணப்பத்தினைப் பூரணப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பிடிஎப் ...

மேலும்..

ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (செவ்வாய்கிழமை) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து இணக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கு ...

மேலும்..

விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வேட்பாளரோ அல்லது ...

மேலும்..

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும் அச்சங்கம் மக்களைக் கேட்டக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 16 பேர் இன்று(புதன்கிழமை) குணமடைந்துள்ளனர். தேசிய தொற்றுநோய் பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2064 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை இலங்கையில் 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் ...

மேலும்..

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தமது பூர்வீகத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை உள்ளது- உதயகுமார்

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது பூர்வீகத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை உள்ளது என கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை மக்கள் பலப்படுத்த ...

மேலும்..

கப்பலொன்றில் பணியாற்றுவதற்காக 28 கடற்படை ஊழியர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் பணியாற்றுவதற்காக 28 கடற்படை ஊழியர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரிலிருந்து இன்று(புதன்கிழமை) அதிகாலை 1.30 அளவில் இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அத்துடன், அவர்கள் அனைவரும் கொழும்பிலுள்ள இரண்டு தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ...

மேலும்..

கலாநிதி குருபரனின் பதவி விலகல் கல்வி சமுகத்திற்குப் பேரிழப்பாகும் – தமிழ் மக்கள் பேரவை

கலாநிதி குருபரன் அவர்களின்  பதவி விலகல் கல்வி சமுகத்திற்குப் பேரிழப்பாகும், பல்கலைக்கழக சமுகம், உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என  தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிகையில் மேலும், ...

மேலும்..

15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து!

15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறி கப்பல்களில் எரிந்த நிலையில் கழிவுகளாக எஞ்சியிருந்த எண்ணெய்யை கடலில் வீசிய குற்றச்சாட்டுக்கு அமையவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடற்படை, பொலிஸ் ...

மேலும்..

சுமந்திரனின் வாதத்தை அடுத்து விடுவிக்கப்பட்டார் கண்ணதாசன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், அந்தக் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் ...

மேலும்..

நாட்டில் வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு

நாட்டில் வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கமை ஆண்டின் முதலாவது காலாண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் நான்கு இலட்சத்து 83 ஆயிரத்து 172 பேர் தொழிலை இழந்துள்ளனர். இது நூற்றுக்கு 5.7 வீதமாகும் என அரச புள்ளிவிபரவியல் ...

மேலும்..

தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். சட்ட விரோத தேர்தல் பிரசார பேரணிகள் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தியமை ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற கொள்ளை: 17 பவுண் தங்க நகைகள் பறிபோயின!

யாழ்ப்பாணத்தில் வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை புகுந்த 2 கொள்ளையர்களே இவ்வாறு நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, “வாள் , கோடரி ...

மேலும்..