சிறப்புச் செய்திகள்

பொதுத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இறுதி நாள் இன்று!

எதிர்வரும் பொது தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடையவுள்ளது. இதற்கமைய கடந்த 6 நாட்களில் தபால்மூல வாக்கினை செலுத்த முடியாதவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இம்முறை தபால்மூல ...

மேலும்..

கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைத்து கடற்படையினரும் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து, அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் ...

மேலும்..

தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை – இப்படிக் கொதித்தெழுகின்றது மஹிந்த அணி

"நாட்டின் அரசமைப்புக்கு முரணாகத் தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது." - இவ்வாறு மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டியூ குணசேகர ஆகியோர் கூட்டாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு, கிழக்கில் சமஷ்டி ...

மேலும்..

கல்லடி சமுகத்தின் பேராதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஸ்ரீநேசனுக்கான தேர்தல் பிரச்சார பணிகள்

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஞானமுத்து ஸ்ரீநேசனின் தேர்தல் பரப்புரைகள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினரால் கல்லடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

கூட்டமைப்பின் பலமே தமிழ் மக்களின் பலம்! – முன்னாள் எம்.பி. சரவணபவன் தெரிவிப்பு

"தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குகள் கூட்டமைப்பைப் பலப்படுத்தும். கூட்டமைப்பு பலம் பெற்றால் அதுவே தமிழர்களின் பலமாகவும் அமையும்" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். மந்துவில் ...

மேலும்..

சலுகைகளை வழங்கி சமாளிக்கவே முடியாது – தமிழர் உரிமைகளே வேண்டும் என்கிறார் சம்பந்தன்

"சலுகைகளை வழங்கி சம்பந்தனைச் சமாளிக்கலாம் என்று மஹிந்த ராஜபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நினைக்கக்கூடாது. சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்கவே முடியாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 03 பேர் சவூதி அரேபியாவில் இருந்து ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்தும் அதேவேளை நாடும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது – நாமல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அதேவேளையில், நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாமல் ராஜபக்ஷ, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மந்தமடைந்தது எனக் ...

மேலும்..

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால்தான் இனவாதியாக பார்க்கப்பட்டேன்- விஜயதாச

கடந்த அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால், இனவாதியாக பார்க்கப்பட்டேன் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் விஜயதாச ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “இஸ்லாமிய அடிப்படைவாதம் ...

மேலும்..

கொழும்பிலுள்ள நடுத்தர குடும்பங்களுக்கு விசேட வீட்டுத்திட்டம்- மனோ கணேசன்

கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு சொந்த  வீடுகளை வழங்கும் விசேட வீட்டுத்திட்டம், சஜித் ஆட்சியில் முன்னெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய குழு

சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தலைமையிலான குறித்த குழுவில், சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர, மேனக அரங்கன, ...

மேலும்..

மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு எரிபொருளினை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தினை பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று  (திங்கட்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை ...

மேலும்..

குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழுவின் அறிக்கையை பிரதமரிடம் வழங்க நடவடிக்கை

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பிரதமரிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சி கடந்தகாலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள தயாராக உள்ளது – ரவி

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்திற்கு மட்டுமல்ல, கட்சிக்கும் ஒரு முக்கியமான ஒரு தருணத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது என அக்கட்சியின் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி ...

மேலும்..

முன்னாள் அமைச்சர்களான ராஜித, சம்பிக்கவிற்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவின் ...

மேலும்..