சிறப்புச் செய்திகள்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் சற்று முன்னர் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மூவரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

தனியார் பேருந்து சேவைகளை 50 வீதத்தினால் குறைக்க நடவடிக்கை!

தனியார் பேருந்து சேவைகள் 50 வீதத்தினால் குறைக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய இந்த திட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார். குறைந்தளவு மக்களே பேருந்து சேவையை பயன்படுத்துவதால் ...

மேலும்..

வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினை ஐ.தே.க.வுக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே- சந்திரசேன

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினை, ஐக்கிய தேசிய கட்சிக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே என வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு

தேர்தல் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நாளை மறுதினம் (செவ்வாய்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளதாக அதன் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ...

மேலும்..

கொரோனா அச்சம் – பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த ...

மேலும்..

இராணுவச் சிப்பாய் மீது வேகமாக வந்து மோதிய மோட்டார் சைக்கிள்- யாழில் சம்பவம்!

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றதுடன், இதன்போது இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அவர் ...

மேலும்..

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்- துரைராஜசிங்கம்

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். ‘வடக்கு கிழக்கு மாநிலம் தமிழர்களின் தாயகம் என்ற வகையிலே அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு தமிழீழம் என்று பெயர் சூட்டுவதில் எவ்வித முரண்பாடோ தடையோ கிடையாது’ என வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர் மேற்படி ...

மேலும்..

அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒருதுண்டு காணியைக்கூட மீட்க முடியுமா-கலையரசன் கேள்வி

அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட ஒரு காணியை மீட்க முடியுமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தவராசா கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார். பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரி கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ...

மேலும்..

துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்ற களத்தில் கூட்டமைப்பு வீறுநடை போடுகின்றது- ஜனநாயகப் போராளிகள் கட்சி

துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்ற களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீறுநடை போடுகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் – உதயகுமார்

தமிழ் மக்களுக்கெதிரான பேரினவாத அரச அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் என அக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

மேலும்..

ஐ.நா.வில் தமிழர் பிரச்சனையைக் கையாள தனியான செயற்றிட்டம் தேவை – சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா. விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் பெரும்பான்மையான நாடுகளும் ஒத்துழைப்பினை வழங்குவதன் ஊடாக மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே ...

மேலும்..

பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறு கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

‘ஜெட்’ வேகத்தில் உயர்வடைந்துள்ள பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறும், எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் தேசிய மக்கள் சக்தி, மக்களோடு இணைந்து ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டது. ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த ...

மேலும்..

கந்தகாடு விவகாரம்: வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த முதலாவது ஆலோசகர் குணமடைந்தார்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது ஆலோசகர், பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். ஹபராதுவை- ஹினட்டிகல  பகுதியைச் சேர்ந்த இவருக்கு  பொரளை ஐ.டி.எச்.இல்  சிகிச்சைப்  வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூரண ...

மேலும்..

காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்படவில்லை – விஜயதாச

புலம்பெயர் தமிழர்களும் வெளிநாடுகளும் விரும்பிய விதத்திலேயே காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் உருவாக்கப்பட்டதேயன்றி, தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது ...

மேலும்..