சிறப்புச் செய்திகள்

கந்தக்காடு குறித்து இன்னும் நான்கு நாட்களில் அனைத்து முடிவுகளையும் அறியலாம்- இராணுவத் தளபதி

கந்தக்காட்டில் உள்ள சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இன்னும் நான்கு நாட்களில் கந்தக்காடு நிலைமை குறித்து முழுமையாக அறியமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு ...

மேலும்..

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லை நீடிப்பு!

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மற்றும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளைவிட்டு இன்று (வியாழக்கிழமை) வெளியேறியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 674 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

மேலும்..

வடக்கு, கிழக்கிலுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவியளிக்க இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சஜித் தரப்பு!

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என சஜித் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வருடாந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றது. ஆடிப்பிறப்பின் தந்தை என்று போற்றப்படும் நவாலியூர் சோமசுந்தரம் ...

மேலும்..

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் – விமல் வீரவன்ச!

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மன்னாரிலுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியை பனை அபிவிருத்தி சபையினூடாக வடக்கு பனை விவசாயிகளுக்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சர் விமல் வீரவன்ச முன்னிலையில் ...

மேலும்..

முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை!

அநுராதபுரம் – மீகலேவா பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீகலேவா பகுதியில் உள்ள ஏரியொன்றில் குழந்தையும் அவரது தாயும் நேற்று மாலை நீராட சென்றபோதே, குறித்த பெண் குழந்தை ...

மேலும்..

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரே நிதிச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் ...

மேலும்..

அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்- அப்துல்லாஹ் மஹ்ரூப்

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவு!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 13ஆம், 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெற்ற தபால்மூல வாக்கு பதிவிடும் நடவடிக்கை உதவி ...

மேலும்..

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின் படி, பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 130,390 பி.சி.ஆர். ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொது தேர்தலை ...

மேலும்..

பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகள் உருவாகுவதற்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் – நாமல்!

மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை வெளிநாடுகளே உருவாக்கின என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

முகக்கவசத்தின் ஊடாக கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என வலியுறுத்து!

முகக்கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா  வைரஸ் தொற்றாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற ...

மேலும்..