சிறப்புச் செய்திகள்

அரசாங்கம் மக்களை வறுமையை நோக்கித் தள்ளுகிறது – சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேறுவதற்கு பதிலாக அவர்களை வறுமையை நோக்கித் தள்ள முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். ரம்புக்கன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள அவர், பொதுத் தேர்தலுக்கு பின்னர் மக்களுக்கான ...

மேலும்..

அநுராதபுரத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்: சுய தனிமைப்படுத்தலில் 100 பேர்

அநுராதபுரம்- கல்கிரியாகம, இரணவ பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்  அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பினை பேணிய 100பேரை, சுகாதார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரணவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரச சேவையாளர்கள் சிலரையே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ...

மேலும்..

மட்டக்களப்பில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

சர்வதேச அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது: அரசாங்கத்திடம் ரணில் கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், கொரேனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் ...

மேலும்..

பெப்ரவரி மாத மின் கட்டணமே அடுத்த மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் – அமைச்சு அதிரடி அறிவிப்பு

பெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் நடுப்பகுதி முதல் நாட்டில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளால் மார்ச், ஏப்ரல் மற்றும் ...

மேலும்..

ரணிலின் குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதில்

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்கவில்லை என பலமுறை கூறிவிட்டோம். ஆனால் ரணில் மீண்டும் இது தொடர்பாகவே எம்மிடம் கேள்வி எழுப்புகிறார் என சுகாதார அமைச்சர் பவித்ரா  வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே ...

மேலும்..

யாழ்.மாவட்ட வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், மாரடைப்பால் இன்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார். தேர்தலிற்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலேயே,  இன்று காலை அவரது வீட்டில் மாரடைப்பினால்  ...

மேலும்..

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள், மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.10 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த 117 இலங்கையர்களும், மாலைத்தீவிலுள்ள  சுற்றுலா விடுதிகளில் பணியாற்றிய ஊழியர்கள என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவருக்கும் ...

மேலும்..

பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவா சஜித் முற்படுகிறார்: உதயகம்மன்பில கேள்வி

கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டு வருடங்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவா சஜித் பிரேமதாச முற்படுகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உதயகம்மன்பில ...

மேலும்..

வடக்கு முஸ்லிம்களின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தினால் இன்று (15.07.2020) யாழ் ஊடக மன்றத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வன் என்.எம். அப்துல்லாஹ் அவர்களின் பிரகடனத்திலே மேற்குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டது. அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2020 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு ...

மேலும்..

எந்தப் பேரினவாதக் கட்சிக்கேனும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது – கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சரவணபவன் வலியுறுத்து

"நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் எந்தப் பேரினவாதக் கட்சிக்கேனும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "2009ஆம் ஆண்டு இறுதிப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது ...

மேலும்..

வாக்களிப்பை அதிகரித்தால் மட்டக்களப்பில் 4 ஆசனங்கள் – கூட்டமைப்புக்குக் கிடைக்கும் என்கிறார் சம்பந்தன்

"மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியே தீரும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு இரா.சம்பந்தன் நேற்று ...

மேலும்..

அமைச்சுப் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை – தமிழரசுக் கட்சியின் கொள்கை அதுவல்ல என்று சம்பந்தன் இடித்துரைப்பு

"புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: கொழும்பிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்று  மூடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்துக்கு கொரோனாவினால் பாதிக்கப்பட ஒருவருடன் தொடர்பினை வைத்திருந்தவர், வருகை தந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிருவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவித்தல் ...

மேலும்..

மாற்றத்தை விரும்புவோர் எங்களுடன் இணையுங்கள் – ஈ.பி.டி.பி

மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் என ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்   சி.கிரிதரன் தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..