சிறப்புச் செய்திகள்

5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை!

பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வருகை தந்த  சந்தேகநபர்,  ...

மேலும்..

13 ஆவது திருத்தம் என்பது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டது – சரத் வீரசேகர

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாக கொண்டே ஜெனிவாவில் 30 கீழ் 1 யோசனை முன்வைக்கப்பட்டது என்றும் அவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உட்பட இலங்கைக்கு எதிராக 8 ...

மேலும்..

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்

இலங்கையின்  வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) விசேட பூஜைகள் நடைபெற்று, கொடிச்சீலைக்கு விசேட பூஜைகளும் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டன. குறித்த விசேட பூஜைகளை தொடர்ந்து வேத, தாள, அரோகரா கோசங்கள் முழங்க ...

மேலும்..

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பியோர் கைது – தனிமைப்படுத்த உத்தரவு!

இந்திய முகாங்களில் தங்கிருந்து சட்டவிரோதமான முறையில், படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய இருவர் உட்பட நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நான்கு பேரையும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

எமது ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது- மஹிந்த

நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.தே.க பிளவடைந்து காணப்படுகின்றமையினால் பொதுஜன ...

மேலும்..

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 43 பேரில் 13 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவர்கள் எனவும் ஏனைய 30 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் ...

மேலும்..

இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்- ஜீ.எல்.பீரிஸ்

இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்குமென பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த நல்லாட்சி ...

மேலும்..

இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் தலைமறைவு: சந்தேகநபரை தேடி அதிரடிப்படையினர் வலைவீச்சு

இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த சந்தேகநபர் உடுத்துறையில் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் அதிரடிப்படையினர் ஈடுப்பட்டுள்ளனர். வடமராட்சியைச் சேர்ந்த படகு உரிமையாளரே இவ்வாறு அதிரடிப்படையினரால் தேடப்பட்டு வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி- உடுத்துறை கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) ...

மேலும்..

கந்தகாட்டில் மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா: 70 சிறுவர்கள் உள்பட 300 பேர் தனிமைப்படுத்தலில்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கு மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகியங்கனையைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனையடுத்து அவர் பழகிய 70 சிறுவர்கள் ...

மேலும்..

அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமாயின் சஜித்தை பிரதமராக்குங்கள்- ரிசாட்

அனைத்து  மக்களும் இன, மத பேதமின்றி ஒத்துமையாக வாழவேண்டுமாயின் சஜித் பிரேமதாசவை நாட்டின் பிரதமராக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியம் என்கின்றார் பிரதமர்

வடக்கு , கிழக்கில் வாழ்ந்த சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை, மிகப்பெரும் பாக்கியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், ...

மேலும்..

கேப்பாப்பிலவு மக்களை மீண்டும் காணிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு

2017 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து, பொது மக்களை மீண்டும் வெளியேறுமாறு, கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம் பகுதியில் 1990 ஆண்டில் இருந்து மக்களினால் குடியிருப்பாகவும் விவசாய நிலமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்த சுமார் 50 ஏக்கர் ...

மேலும்..

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினைக் கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, காந்தி பூங்காவின் முன்னாள் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி இன்று (சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். கொழும்பில் நேற்று ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ...

மேலும்..

கிளிநொச்சியில் மாதிரி வாக்கெடுப்பு

கிளிநொச்சியில் மாதிரி வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) காலை நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலக வளாகத்தில் குறித்த மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாவலப்பிட்டிய மக்கள் உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாவலப்பிட்டியவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அப்பகுதி மக்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உற்சாக வரவேற்பளித்துள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் ...

மேலும்..