சிறப்புச் செய்திகள்

இலங்கையில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2454 ஆக  உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு மத்திய நிலையத்திலுள்ள மூன்று பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...

மேலும்..

இந்தியாவின் ஆதரவுடனேயே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு! சீ.வீ.கே.சிவஞானம் நம்பிக்கை

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இந்தியாவின் ஆதரவுடன்தான் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாண அவைத் தலைவரும் இலங் கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவரது ...

மேலும்..

எமது பேரம்பேசுகின்ற சக்திக்கு அமைச்சுப் பதவி தடையாகும்! இளைஞர்களின் கேள்விகளுக்கு செம்பியன்பற்றில் சுமந்திரன்

சென்ற தடவை நாங்கள் இருந்த அரசைக் கவிழ்த்து , 2015இல் புதிய அரசொன்றை அமைத்தபோது நாம் உறுதுணையாக இருந்தோம். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பமிருந்ததால் அரசை ஆதரித்தோம். அந்தத்தேர்தலின்போதும் அமைச்சுப் பதவி எடுப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவையில் சேர வேண்டுமெனச் ...

மேலும்..

சவேந்திர சில்வா பேருந்தில் வடக்குப் பக்கம் வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம்- சார்ள்ஸ்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்திளரால் இடையூறு இல்லை என்றும் சுமூகமான நிலையே உள்ளதாகவும் அரசியல்வாதிகளே பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு சவாலான ஒரு சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே – கலையரசன்

அரசாங்கத்திற்கு மிகச் சவாலான ஒரு சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறியின் அழைப்பின் பேரில் காரைதீவு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தமிழ் ...

மேலும்..

வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ்

கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததைப்போல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, கற்குளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “1948ஆம் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் குணமடைந்தார்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் ஒருவர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அந்தவகையில் நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,980 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2350 பேரில் ...

மேலும்..

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது- அனில் ஜாசிங்க

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த  மறுவாழ்வு மையத்திலுள்ள கைதிகளிடமிருந்து கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகம் பதிவாகும் போக்கு  காணப்படுவதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  எனவே, இவ்விடயத்தில் முன்னெச்சரிக்கை ...

மேலும்..

தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்

தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அம்பாறை, அக்கரைப்பற்றில் நடந்தேறியுள்ளது. இதுகுறித்த வழக்கில், தாயையும் அவருடைய மறைமுகக் காதலனையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார். கடந்த 3 ...

மேலும்..

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம்  யாழ்.கிளிநொச்சி அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான டேவிட் நவரட்ணராஜ் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் ஜனநாயக இடது சாரி முன்னணியின் சார்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்

போதைப்பொருள் கடத்தலில் குற்றவாளிகளாக இருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொலிஸார் விரும்புகின்றனர். இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, ...

மேலும்..

சிறைக்கைதிகள் தங்குமிடத்தில் 12 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் விடுதிக்கு அருகிலுள்ள கழிவுநீர் வாய்க்காலில் இருந்து 12 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த  கழிவுநீர் வாய்க்காலினை சுத்தப்படுத்தும்போதே குறித்த கையடக்க தொலைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, சிறைசாலையின் அனைத்து பகுதிகளையும் ...

மேலும்..

தொல்பொருள் அடையாளப்படுத்தும் முனைப்புக்கள் இன முறுகலை ஏற்படுத்தி விடக்கூடாது – ரிஷாட்

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், மன்னார் – ...

மேலும்..

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த 266 இலங்கையர்களும், சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும், பி.சி.ஆர் பரிசோதனை  செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ...

மேலும்..

மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமை எமது அணிக்கே இருக்கின்றது – வேலுகுமார்

மலையக  தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே கடந்த நான்வரை வருடங்களில் பெற்றுக்கொடுத்தது. எனவே, மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமையும், பேரம் பேசும் ஆற்றலும் எமது அணிக்கே இருக்கின்றது. வாக்குரிமை மூலம் அதனை மக்கள் மேலும் பலப்படுத்தவேண்டும்.”  ...

மேலும்..