சிறப்புச் செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுகிறார்கள்- சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். . புலோப்பளை மக்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்  அண்மையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவரும்  மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரனான பசில் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். அவரின் சகோதரன் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இரண்டு வரவு செலவு திட்டங்களிற்கு நாம் ஆதரவளித்து இருக்கிறோம். எங்கள் இனத்தின் நிரந்தர அரசியல் தீர்விற்காகவே நாம் ஆதரவளித்திருந்தோம். நாம் அவர்களோடு19 தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம்.19 தடவைகளும் பொய்களையும் பிரட்டுக்களையும் கூறினார்கள்  ஆனால் அவர்கள் எந்தவிதமான தீர்வுகளையும் தரவில்லை.13+ ஐ கொடுக்கப் போவதாக கூறி எம்மை ஏமாற்றியவர்கள் இப்போது 13 ம் இல்லை என்கிறார்கள். இப்போது வடக்கு மாகாணம் முழுவதும் புதிதாக இராணுவ சோதனை சாவடிகள் முளைத்திருக்கின்றன. இதனால் இந்த நாடு முழுவதும் ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது.  இந்த விடயங்களை சிங்கள மக்கள் நன்கு புரிந்து விட்டார்கள் ராஜபக்சாகளின் இராணுவ ஆட்சியை நன்று  விளங்கிவிட்டார்கள் இவர்களின் உண்மை நிலைப்பாட்டை சில சிங்கள கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் தோற்று விடுவோமோ னிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற பீதி ராஜபக்சாக்களை ஆட்கொண்டுள்ளது நாட்டில் ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.

வ.ராஜ்குமாா் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட மூதூர் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அடுத்த வாரத்தில் தீவிரமாக இடம்பெறவுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் வேட்பாளருமான ச.குகதாசன் இன்று 9ம் திகதி ஊடகங்களுக்கத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக ...

மேலும்..

பௌத்த பெரும்பான்மை அரசு வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது – உதயகுமார்

பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளித்து ஏனைய இன மக்களினதும் அவர்களின் மதங்களையும் அடக்கி ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் அரசு வடக்கு கிழக்கையும் ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கிறது என மட்டக்களப்பில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மாணிக்கம் ...

மேலும்..

வெலிக்கட சிறைச்சாலையில் மேலும் 294 கைதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பினைப் பேணியதாக மேலும் 294 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த கைதிகள் இன்று (வியாழக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ...

மேலும்..

தேர்தல் பிரசாரத்திற்காக சஜித் பிரேமதாஸ நுவரெலியாவிற்கு விஜயம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நுவரெலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலேயே அவர் எதிர்வரும் 15ஆம் திகதி அங்கு விஜயம் செய்யவுள்ளார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் ...

மேலும்..

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு சுகாதார நடைமுறையுடன்  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தல் கூட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் ...

மேலும்..

தொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 12 பேர் மீண்டனர்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1979 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 2 கடற்படையினரும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் ...

மேலும்..

வடக்கில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்!

வடக்கில் கடந்த 7 மாதங்களில்  2327 kg கஞ்சா போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த 7 ...

மேலும்..

வன்னி மக்களின் துயர் துடைக்க முன்வந்துள்ள வீரப்பெண்மணி

பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை. பிரச்சனைகள் வரும்போது தீர்வை தேடுவது மனித இயல்பு. ஆனால் நாம் தேடும் தீர்வானது சரியானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும்.         இதற்கு தீர்வு தேடும் வகையில்  களம் இறங்கியுள்ளார்      வவுனியாவில்  ...

மேலும்..

யாழில் திடீர் என முற்றுகையிடப்பட்ட வீடு – கைக்குண்டு, இராணுவச்சீருடை, வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்  முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்கள் தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நீர்வேலி கரந்தனில் உள்ள குறித்த வீட்டின் ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கமே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழியேற்படுத்தியது – மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி தகவல்களை மறைப்பதன் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் கடுகம்பளை பிரதேசத்தில் நேற்று ( புதன்கிழமை) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பொன்றின் ...

மேலும்..

விமானப் படைக்கான ஹெலிகொப்டர் கொள்வனவிற்கு அனுமதி!

இலங்கை விமானப் படை விமானிகளின் பயிற்சிக்காக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

மதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை!

மதகுருமார்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளை இணைத்து அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிட்டு செயற்படக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் ...

மேலும்..

தாயை இழந்து பரிதவித்த யானைக்குட்டி மீட்பு!

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தாயை இழந்து தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்று நேற்று(புதன்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிறைந்த யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தனிமையில் அப்பகுதியில் இருப்பதை கண்ட ...

மேலும்..