சிறப்புச் செய்திகள்

அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள விஷேட கலந்துரைடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் இந்த காலத்தில் அரசாங்க ...

மேலும்..

தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலக்கு- கருணா

தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே தனது இலக்கு என ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனையில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “அடுத்த 15 ...

மேலும்..

சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பரிசோதனைகள் முடிவுகள் வரும் வரையில் அவர்களை ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைக் குறித்து 10ஆம் திகதி தீர்மானம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 7ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் பிற்போடுவதாகத் ...

மேலும்..

மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நாற்பது ஏக்கர் கொண்ட காணியை, நேற்று முன்தினம் ...

மேலும்..

திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும்

திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது அதிகபட்சம் 300 பேர் எனும் இரு எண்ணிக்கைகளில் குறைவான எண்ணிக்கை எதுவோ, அவ்வெண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என ...

மேலும்..

இலங்கை மீனவர்கள் இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் காப்பாற்றப்பட்டனர்!

இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். படகு விபத்துக்கு ...

மேலும்..

உண்மையான சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி கோட்டாவை சுற்றியுள்ளனர் – அமைச்சர் பிரசன்ன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சுற்றியுள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கணேமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருப்பவர்கள் கொள்கை அடிப்படையிலான அரசியல் ...

மேலும்..

போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் வழிகாட்டியாக செயற்பட முடியாது – கலையரசன்

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது   என முன்னாள் கிழக்கு  மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன்  தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்  மத்திய முகாம் பிரதேசத்தில் மாலை இடம்பெற்ற கூட்டத்தில் ...

மேலும்..

ஐ.தே.க. மீண்டும் ஒரு வலுவான கட்சியாக உருவெடுக்கும் – நவீன்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒரு வலுவான கட்சியாக உருவெடுக்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். வலப்பன பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குறைபாடுகள் இருந்தாலும் யானையின் சின்னத்தை அழிக்க யாரும் அனுமதிக்க ...

மேலும்..

அரிசி ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவர் காயம்

ஏறாவூர் பகுதியிலிருந்து  பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி   ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் ...

மேலும்..

யாழ்.மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது!

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை இன்று(திங்கட்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தற்போது, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ...

மேலும்..

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் இன்று (திங்கட்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,917 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே தற்போதுமட்டும் 148 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதிலும் ...

மேலும்..

தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், இம்மாத நடுப்பகுதியில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு- கிழக்கில் போட்டியிடும் பிரதான மூன்று தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் பணிகள், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு – கஃபே அமைப்பு நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள கஃபே அமைப்பு அவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக கரிசனை செலுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் இன்று (திங்கட்கிழமை) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது ...

மேலும்..