சிறப்புச் செய்திகள்

குருமன்காட்டில் இராணுவச் சோதனை சாவடி: அசௌகரியத்தில் மக்கள்

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடியொன்று இன்று (திங்கட்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் அதிகளவு நடமாடும் குருமன்காடு பகுதியிலேயே இந்த இராணுவச் சோதனை சாவடி ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த முக்கிய தகவல் வெளியானது!

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் தீர்மானிக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக குறித்த தீர்மானத்தினை மேற்கொள்ளுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாக பாடசாலைகள் மற்றும் ...

மேலும்..

சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம் – ரிஷாட்

முசலிப் பிரதேசத்தில் புதிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிய வேளை, எமது முயற்சிகளுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றையெல்லாம் தாண்டி, புதிய கிராமங்களை உருவாக்கி, மக்களை மீண்டும் குடியேற்ற முடிந்ததென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி ...

மேலும்..

யாசகரின் வங்கி கணக்கில் பல இலட்சம் ரூபாய் வைப்பு- கொழும்பில் சம்பவம்

கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளரான மர்வின் ஜானா என்பவருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட ...

மேலும்..

குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையில்  செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ளக முரண்பாடு – புதிய கற்கை நெறியை ஆரம்பிப்பதில் தாமதம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவ கற்கை நெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ள போதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல்  இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் ...

மேலும்..

மருதனார்மடத்தில் வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பு!

மருதனார்மடம் – கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அண்மையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதனை மீட்டு செயலிழக்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றில் இன்று ...

மேலும்..

வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய இருவர் கைது!

வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனின் சுவரொட்டிகளுடனே குறித்த இருவரும் நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்..

நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான அறிக்கை தயார்!

நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம் மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான காலஎல்லை நிறைவடைந்த பின்னரும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  இறுதி அறிக்கையினை  தயாரிப்பதில்  தாமதம் ...

மேலும்..

ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவன் உயிழப்பு!

மட்டக்களப்பு– கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று /(ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதியை அண்டி வசிக்கும் ஹமர்தீன் முஹம்மத் றுசைத் (வயது ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க முயற்சி- ரவி குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றாரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் வீரர்களாக பயன்படுத்தப்படவில்லை – கருணா

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக பயன்படுத்தவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ...

மேலும்..

அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிக்கின்றன- கபே குற்றச்சாட்டு

அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றதென கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்ந விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை ...

மேலும்..

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து அறிக்கை கோரும் ஜனாதிபதி

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பொலன்னறுவை அத்தனகடவல பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது, பொலன்னறுவை மாவட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ...

மேலும்..