சிறப்புச் செய்திகள்

மஹிந்தவை பிரதமராக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சதி- வஜிர

சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு குழுவினர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்குரிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தலாவ-தம்மென்னாவ சுதந்திர பூங்காவில் இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதி அப்பகுதி ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர்  கலாமதி பத்மராஜா தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியுடனான காலநிலை ...

மேலும்..

கொழும்பு – ஜிந்துபிட்டியை முடக்க வேண்டிய அவசியம் இல்லை: அதிகாரிகள் தெரிவிப்பு

நோய் தடுப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால் கொழும்பு – ஜிந்துபிட்டிய பகுதியை முடக்கவேண்டிய அவசியமில்லை என கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார். ஜிந்துபிட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டுபேரை ...

மேலும்..

நாட்டை இராஜதந்திர மிதிவெடிகளில் இருந்து காப்பாற்றுவேன்- விமல்

நாட்டை இராஜதந்திர மிதிவெடிகளில் இருந்து காப்பாற்றுதற்கு ஏற்றவகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தல் தொடர்பான அரசியல் கொள்கைகளை மல்வத்த அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 36 பேர் மீண்டனர்!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில்,  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 66 பேரில் ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 192 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், ...

மேலும்..

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. அதனைக் கடத்திச் சென்றவர்கள் கடலில் வீசிவிட்டு படகில் தப்பித்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து ...

மேலும்..

அவன்காட் விவகாரம்- ராஜித 200இலட்சம் ரூபாய் கப்பம் பெற்றதற்கான ஆதாரம் வெளியானது

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 2015ஆம் ஆண்டு அவன்காட் ஊடாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 200இலட்சம் ரூபாய் காசோலை தொடர்பான ஆதாரங்களை கொழும்பில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள  விஜயதாச ராஜபக்ஷ  ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவன்காட் நிறுவனம் தொடர்பாக தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 29 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 29 கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். அதற்கமைய குணமடைந்த மொத்த கடற்படையினரின் எண்ணிக்கை 877 ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 29 கடற்படை வீரர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் ...

மேலும்..

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழப்பு!

குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை ) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர். உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா , 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிளே ...

மேலும்..

பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்

பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே, பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிடவுள்ளதாக துறைமுக தொழிங்சங்கம் அறிவித்துள்ளது. இற்த கலந்துரையாடலின்போது, ...

மேலும்..

பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் தினமும் 6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில்,  அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக்கவசம் ...

மேலும்..

மஹேலவிடம் இன்று சாட்சியம் பெறப்படாது – விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இன்று சாட்சியமளிக்க வருகைத்தர மாட்டார் என விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, எதிர்வரும் நாட்களில் அவரை அழைக்கவுள்ளதாகவும் அந்த விசாரணைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை ...

மேலும்..

2 நாட்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமரைச் சந்திக்கும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள்

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி நேற்று முன்தினம் ...

மேலும்..