சிறப்புச் செய்திகள்

ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் ஊடாக ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் நரிடா விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு வருகை தந்துள்ள ...

மேலும்..

அபிவிருத்திகளுக்காக மட்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை! பா.அரியநேத்திரன்,மு.பா.உ.

தமிழ்தேசியகூட்டமைப்பு 2001,ம் ஆண்டு தேசியதலைவர் பிரபாகரனின் வழிப்படுத்தலில் உருவாக்கப்பட்டது அபிவிருத்திகளைமட்டும் செய்வதற்கல்ல தமிழ்தேசிய உறுதியுடன் வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமையையும் வென்றெடுப்பதற்கே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ...

மேலும்..

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார். பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் ...

மேலும்..

இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 05 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2060 ஆக ...

மேலும்..

மட்டக்களப்பில் நான்கு ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை கூட்டமைப்புக்கு உள்ளது – ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டதில் நான்காவது ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே உள்ளதாக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில்   இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கருத்து ...

மேலும்..

கொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ...

மேலும்..

உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு – உதயகுமார்

உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளரும் ...

மேலும்..

பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம்!

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றை தினம் ஜனாதிபதி, ...

மேலும்..

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 11 பேர் கைது – நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் சேவையாற்றிய 11 அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தவுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு ...

மேலும்..

எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து அமைச்சர்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி

அமெரிக்கா நிறுவனத்துடனான எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமைச்சர்கள் அனைவரையும் தங்கள் தனிப்பட்ட கருத்தினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளாரென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் எம்.சி.சி விடயம் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்த அவர், எம்.சி.சி உடன்படிக்கை குறித்து மீளாய்வு குழு ...

மேலும்..

மக்களின் மின் கட்டண பழுவை குறைக்கவும் – வி.ஜனகன் அவசர கோரிக்கை!

கொவிட் 19 வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டு மக்களால் நுகரப்பட்ட அதிகரித்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் இன்று மக்களுக்கு ஒரு பாரிய சுமையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினைக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் ...

மேலும்..

கைவிடப்பட்ட காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச்செய்கை!

ஹங்வெல்ல, வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல்   ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணிகளில் மீள மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை!

காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி கசூரினா கடற்கரை (பீச்) பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. நாட்டில் கொரோனோ அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், காரைநகர் பிரதேச சபையினரால் கசூரினா பீச் மக்கள் பாவனைக்காக திறப்பதற்கான நடவடிக்கைகள் ...

மேலும்..

புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் மோசமாக சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் எஞ்சிய புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார். புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு நேற்று (புதன்)  விஜயம் செய்த ...

மேலும்..

மாலைதீவிலிருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று (வியாழக்கிழமை) அவர்கள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பரிசோதனை ...

மேலும்..