சிறப்புச் செய்திகள்

இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

விசைப்படகு பழுதானதால் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்குப் பின்னர், பழுதான விசைப்படகுடன் மீனவர்கள் நால்வரையும் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். ராமேஸ்வரத்ததைச் சேர்ந்த கிருஸ்ணவேணி என்பவருக்கு ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2042 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மூவருக்கே இவ்வாறு ...

மேலும்..

ஐ.நா. அதிநவீன உபகரணங்களுடன் எங்கள் நிலத்தை பரிசோதித்தாலே உண்மை தெரியவரும்- சவேந்திர சில்வாவின் கருத்து குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அதிநவீன உபகரணங்களுடன் எங்கள் நிலத்தில் உள்ள எஞ்சியவற்றை பரிசோதித்தாலே உண்மையைக் கண்டறிய முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரணுவத்தளபதி சவேந்திர சில்வா அண்மையில் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக பதிலளிக்கும் வகையில் வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

தமிழர்களை அழித்த சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்கிறார் சிறீதரன்

தமிழர்களை சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யார் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் ...

மேலும்..

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்! அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்!

நக்கீரன் (சட்டத்தரணி மனோன்மணி சதாசிவம் சுமந்திரன் பற்றி அவதூறு கற்பித்து பத்துப் பக்கங்களில் சாக்கடை நடையில் எழுதிய கட்டுரைக்கு எமது எதிர்வினை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரனுக்கு எதிராக கடுமையான ஆனால் அடி நுனி இல்லாத  குற்றச்சாட்டுக்களை சட்டத்தரனி திருமதி மணோன்மணி சதாசிவம்  ...

மேலும்..

தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய்கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக வீட்டுச்சின்னத்தின் வாக்குகளை அதிகரிக்க பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி கிளை நிர்வாக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி கிளையின் நிர்வாக கூட்டம் இன்று 28/06/2020 பி.ப 4, மணியளவில் கிழக்கு  மாகாணசபை ...

மேலும்..

இராணுவ மயமாக்கல் மூலம் தமிழர்களை முடக்க நினைக்கிறார் கோத்தபாய எச்சரிக்கிறார் சிறீதரன்

இராணுவ மயமாக்கல் மூலம் ஜனாதிபதி கோத்தபாய தமிழர்களை முடக்க நினைக்கிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ் நகரில் இன்று இளைஞர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

கூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய பிள்ளையானின் வேட்பாளர்

செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார். வேலாயுதம் ஜெயக்குமார் ...

மேலும்..

யாழ்.மகளிர் அணி விமலாவை உடன் கட்சியில் இடைநிறுத்துக! தலைவர் மாவை செயலருக்கு அறிவுறுத்தல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி மகளிர் அணி யாழ்.மாவட்ட செயலாளர் என்று தெரிவித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகச் சந்திப்பு நடத்திய விமலேஸ்வரி, மேற்படி ஊடக சந்திப்பு தொடர்பில் கட்சித் தலைவராகிய தனக்கோ அல்லது பொதுச் செயலாளராகிய துரைராஜசிங்கத்துக்கோ எந்த அறிவுறுத்தலும் வழங்காமல் தன்னிச்சையாக ...

மேலும்..

உடன்படிக்கையை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை எமக்கில்லை – அரசாங்கத்தரப்பு

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நல்லாட்சி  அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிப்பு!

எதிர்வரும்  2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பாக  பொது நிர்வாக அமைச்சினால்   அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜனவரி மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தை பொங்கல் மற்றும் போயா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2039 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு இன்று (திங்கட்கிழமை) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ...

மேலும்..

20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்    என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

சஜித் பலவீனமானவர் என்பது ஹரீன் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது- பிமல்

சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்த ஹரீன் பெர்ணான்டோ விவகாரத்தில் சஜித் பிரேமதாச செயற்பட்ட விதம் அவர் பலவீனமாவர் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோவுக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ...

மேலும்..

10 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்ற குற்றச்சாட்டு – ஐக்கிய தேசியக் கட்சி மறுப்பு

நல்லாட்சி அரசாங்கத்திற்கு அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மூலம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் குறித்த பரிவர்த்தனை இடம்பெற்றதாக ...

மேலும்..