சிறப்புச் செய்திகள்

கொஸ்கொடயில் விகாரதிபதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கொஸ்கொட– மஹயிந்துருவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாரதிபதி இறந்த நிலையில் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஸ்ரீ விஜயதர்மனந்தா தேரரே (வயது 73) உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணையை ...

மேலும்..

களுத்துறை நகர சபை தவிசாளர் கைது

களுத்துறை நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சொத்துகளுக்கு சேதம் விளைவித்த காரணத்தினால் இன்று (திங்கட்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..

மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதியகட்டிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் நாளை ( செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

மஹிந்த- கோட்டாபய ஆகியோரே வடக்கு மக்களின் சொத்துக்களை அழித்தனர்- விஜயகலா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே வடக்கு மற்றும் கிழக்கில் போரை தீவிரப்படுத்தி தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தார்கள் என முன்னாள் கல்வியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு ...

மேலும்..

அரச சொத்துக்களை ராஜபக்ஷ பிரசாரத்திற்காக முறைக்கேடாக பயன்படுத்துகின்றார் – திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு

பொதுத் தேர்தல் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தி வருகின்றார் என திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

புளுக்குணாவி நீர்ப்பாசன நெற்செய்கை அறுவடை விழா!

மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக அறுவடை விழா நிகழ்வு மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) மாவடிமுன்மாரி கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) பட்டிருப்பு நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுபாகரன் தலைமையில் நடைபெற்றது. அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வில், மங்கலவிளக்கேற்றல், தமிழ் மொழி வாழ்த்து, தேசியகீதம், அதிதிகளுக்கு தலைப்பாகை கட்டுதல், ...

மேலும்..

மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். அந்த வகையில், மாவட்டத்தில் ஜுன் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஜுன் ...

மேலும்..

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்தபோது படகில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் என தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஆறு பெண்கள் ...

மேலும்..

ராஜித மற்றும் சம்பிக்க கப்பம் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது- விஜயதாச

முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அவன்காட் நிறுவனத்திடமிருந்து பெருந்தொகையான பணத்தை  கப்பமாக பெற்றுள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது ராஜித ...

மேலும்..

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17ஆம்  திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் மூலமாக ...

மேலும்..

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலமாக செயற்படுவேன் – கேணல் ரட்ணபிரிய

வடக்கையும் தெற்கையும் இணைக்க கூடிய உறவுப்பாலமாக நான் செயற்படுவதுடன் எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மக்களுடன் நான் இருப்பேன் என பொதுஐன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார். வவுனியா குருமன்காட்டில் பொதுஐன பெரமுனவின் கட்சிகாரியாலத்தை இன்று (திங்கட்கிழமை) திறந்துவைத்துவிட்டு ...

மேலும்..

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியமைக்கான காரணத்தை வெளியிட்டது ஐ.தே.க

இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட ...

மேலும்..

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 5,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 5,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாத்திரம் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதில் நான்கு புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,037 ...

மேலும்..

வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

சகல தேர்தல் மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுகள் அச்சிடப்பட்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு, ...

மேலும்..

மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மேலதிக வகுப்புகளை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்காக இணைத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 100 ...

மேலும்..