சிறப்புச் செய்திகள்

எம்.சி.சி உடன்படிக்கை விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

எம்.சி.சி உடன்படிக்கையை அரசாங்கம் அங்கீகரிக்க தீர்மானித்துள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சேதவத்த விகாரையின் மத நிகழ்வுகளில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த ...

மேலும்..

சர்வதேச ஆதரவுடனே அரசுடன் இனிப் பேச்சு! கூறுகின்றார் சம்பந்தன்

தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அனைவரதும் ஆலோசனைகளையும் பெற்றே பேச்சுவார்த்தையை நடத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகக் கொழும்பிலிருந்து சில தினங்களுக்கு ...

மேலும்..

மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை – கருணா

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். அம்பாறையில் அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட ...

மேலும்..

மஸ்கெலியாவில் தீ விபத்து – இரு வீடுகள் தீக்கிரை

மஸ்கெலியா – லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள நிலையில், ஒரு வீடு முழுமையாகவும் மற்றுமொரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, ...

மேலும்..

தமிழ் தேசியம் பேசுபவர்களின் ஆதாரங்கள் எனது கையில்- கருணா விடுத்துள்ள மிரட்டல்!

தமிழ் தேசியம் பேசுபவர்கள் தொடர்பாக தம்மிடம் இருக்கும் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டால் அவர்களை நேரடியாக கைது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் ...

மேலும்..

அம்பாறையில் ஆரம்பமானது கருணாவின் தேர்தல் பிரசாரம்

தமிழர் மகாசபை சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான், தனது தேர்தல் பிரசாரத்தை அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். அம்பாறை மாவட்டம்- கல்முனை, அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் தேங்காய் உடைத்த பின்னர் ...

மேலும்..

வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் – துமிந்த

நாட்டில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் ...

மேலும்..

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரின் சிலை திறப்பு

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் Bettacchini-இன் சிலை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. யாழ். மறைமாவட்டத்தின் முதல் ஆயராக வடிவமைக்கப்பட்ட உருவச் சிலையினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இன்று திறந்து வைத்தார். குறித்த சிலையை வடிவமைத்த ...

மேலும்..

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக இனிவரும் காலங்களிலும் குரல் கொடுப்பேன்- நவீன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குரலாக எதிர்வரும் காலங்களிலும் இருப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) நுவரெலியா- கொத்மலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் ...

மேலும்..

ஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்

இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பேருவாலை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அனைத்து தேசபக்தர்களும் ஐக்கிய ...

மேலும்..

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறது- விமல்

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறதென அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது ...

மேலும்..

கருணாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் – லக்ஷமன்

போரின்போது இரண்டு, மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக கருணா அம்மானே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியும் என லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கருணா அம்மான் ...

மேலும்..

ஐ.சி.சி.யிடம் ஆட்டநிர்ணய சதி குறித்த ஆதாரங்கள்- மஹிந்தானந்த

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியின்போது, ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷியில் இருந்து நாடுதிரும்பிய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ...

மேலும்..

தமிழரசுக்கட்சி ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி குறித்து விமலேஸ்வரி கேள்வி

புலம்பெயர் அமைப்புகளினால் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி குறித்து தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இது தொடர்பாக ...

மேலும்..