சிறப்புச் செய்திகள்

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்- வேட்பாளர் கணேஸ்வரன்

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாங்கள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, மாயவனூர் பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன நாடாளுமன்றில் கால்பதிக்கும்- சி.பி.ரத்நாயக்க

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார். பூண்டுலோயா, கலப்பிட்டிய பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 2014 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் வாக்கு கேட்கிறார்- தவராசா

சீ.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு, இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றாரென முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாளர் ...

மேலும்..

கோட்டாபயவை ஜனாதிபதியாக்க பல தியாகங்கள் செய்யப்பட்டன – பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க தம் தரப்பில் இருந்து பல தியாகங்கள் செய்யப்பட்டன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொம்பே பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், அந்த தியாகங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ...

மேலும்..

தனது ஆட்சியில் எரிபொருள் விலையை குறைப்பதாக சஜித் உறுதி

பொதுமக்களுக்கு தனது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் சலுகைகள் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போது குறைக்கப்பட்ட எரிபொருள் விலையின் பலன்களை மக்கள் அனுபவிக்கவில்லை என்றும் ...

மேலும்..

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா? ஜனாதிபதி விளக்க வேண்டும் என்கின்றார் கிரியெல்ல

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா என ஜனாதிபதி விளக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பொதுஜன ...

மேலும்..

இலங்கையின் எல்லைப் பகுதி பலவீனமாக காணப்படுகின்றது- அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையின் கடல் சார்ந்த எல்லைப் பகுதிகள் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றதென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் அனைத்து நாடுகளிலும் காணப்பட்ட பயங்கரவாத நிலைமை குறித்து வெளியிட்டுள்ள தனது வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த ...

மேலும்..

மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று திறக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று (சனிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. இலங்கையில் மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் ...

மேலும்..

“மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது”

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நிலவும் சவால்களுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஜனாதிபதித் தேர்தலின்போது ...

மேலும்..

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்களே இன்னும் அச்சிடப்படாமல் இருப்பதாக அத் திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கண்டி ...

மேலும்..

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால இராஜினாமா

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால அனுப்பிய இராஜினாமா கடிதத்தை பேரவை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் ஜயந்த தனபால உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி அரசியலமைப்பு சபையில் இருந்து இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பேரவையின் ...

மேலும்..

விக்கி- சம்பந்தன் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கவேண்டும்: வினோநோகராதலிங்கம்

விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். வவுனியா- புளியங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

சித்தங்கேணியில் வயோதிப பெண்களை தாக்கி கொள்ளை

வட்டுக்கோட்டை சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தி தாக்கி  25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் காரைநகர் – யாழ்ப்பாணம் வீதியில் சித்தண்கேணியில் வயோதிபப் ...

மேலும்..

முழுமையான காணொளியை பார்த்துவிட்டு என்னைப்பற்றி விமர்சியுங்கள்- கருணா

இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டு பேசினேனா என்பதை முழுமையான காணொளியை பார்த்தால்தான் தென்னிலங்கையிலுள்ள மக்கள் மற்றும் ஏனையோர் புரிந்துக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..