சிறப்புச் செய்திகள்

குணாளன், கார்த்தீபன் முயற்சியால் நீக்கப்பட்டது நயினாதீவுக்கான பாஸ்!

நயினாதீவு செல்வதற்கான பாஸ் நடைமுறை நயினாதீவைச் சேர்ந்த ம.கார்த்தீபன் மற்றும் க.குணாளன் ஆகியோர் அதற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ்  இதனைத் தெரிவித்துள்ளார். ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நால்வருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மடு மாதா ஆலய திருவிழாவில் ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி- இம்மானுவேல்

அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார்- மடு மாதா திருத்தலத்தில் ...

மேலும்..

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகின்றது – சுமந்திரன் எச்சரிக்கை

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி நெல்லியடி ...

மேலும்..

நல்லுாரிலுள்ள பாரதியார் சிலை மீது தேர்தல் சுவரொட்டிகள்- மக்கள் விசனம்

யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பொது இடங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டுமென பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ...

மேலும்..

வவுனியா- ஓமந்தையில் விபத்து: 18 பேர் படுகாயம்

வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த 18பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ...

மேலும்..

இம்முறை செல்வந்தர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும்- அஜித் பீ. பெரேரா

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய சட்டத்திட்டத்திற்கு அமைய செல்வந்தர்கள், பண பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மாத்திரமே இம்முறை நாடாளுமன்றத்திற்குச் செல்லமுடியும்  என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் ...

மேலும்..

சர்வதேசத்துடன் இணைந்த அணுகுமுறையே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எமது நகர்வு! வடமராட்சியில் முழங்கினார் மாவை சேனாதி

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வடமராட்சி நெல்லியடி தொகுதியில் உடுப்பிட்டி ...

மேலும்..

ஊசியை விழுங்கிய சிறுவன் – 25 நிமிட சிகிச்சையின் பின் அகற்றிய வைத்தியர்கள்!

வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவரும் எட்டு வயதான சிறுவனொருவர் தவறுதலாக விழுங்கிய ஊசி சுமார் 25 நிமிட சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் தனது வீட்டில் வைத்து குறித்த சிறுவன் 3 இஞ்ச் நீளமான ஊசி ஒன்றினை ...

மேலும்..

எதிர்வரும் காலத்திலும் மஹிந்ததான் பிரதமர்- பிரசன்ன

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷதான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் எந்ததொரு சந்தேகமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) மினுவாங்கொடை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக ...

மேலும்..

எம்.சீ.சீ உடன்படிக்கை நோக்கி அரசாங்கம் பயணிக்கின்றது – அத்துரலியே ரத்ன தேரர்

தற்போதைய அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் திசை நோக்கி பயணிக்கின்றது என  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு எம்.சீ.சீ. ...

மேலும்..

சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!

பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்குறித்து சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ...

மேலும்..

எம்.சி.சி.உடன்படிக்கை: மைத்திரி- ரணிலே பொறுப்பு கூற வேண்டும்- ரோஹித

எம்.சி.சி.உடன்படிக்கையில் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் நிதி தொடர்பாக மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

அரசாங்கத்தை விட தமிழ் மக்கள் தான் முக்கியம் – பிரபா கணேசன்

தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமேயானால் நிச்சயமாக அரசாங்கம் சார்பாக இருக்க மாட்டேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான க.பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியா – தரணிக்குளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த 40 முழுமையற்ற விசாரணை அறிக்கைகள், பதில் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னர் பதில் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட 40 முழுமையற்ற விசாரணை ...

மேலும்..