சிறப்புச் செய்திகள்

இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி நிதி உதவி

இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளது. சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திட்டம் தொடர்பான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், உலக வங்கியின் ...

மேலும்..

தேர்தல் வேட்பாளர்கள் குறித்து தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் குற்றச்சாட்டு

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழைய சம்பவங்கள் குறித்து பேசுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் மாத்திரம் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றார்கள் என்றால், அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்பதே அர்த்தம் என ...

மேலும்..

இலங்கை இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்தார் எடப்பாடி!

இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எனினும், இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது. தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை தங்களிடம் முன்வைத்தது எனத் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26பேர் மீண்டனர்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 26 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  இதுவரை1498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் நாட்டில் 1950பேர் கொரோனா ...

மேலும்..

மீண்டும் மன்னாரில் இந்து மதஸ்தலங்கள் மீது தாக்குதல்

மன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை  சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள், ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகிலுள்ள பற்றைகாடுகளுக்குள் ...

மேலும்..

பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை வெளியீடு

சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி வெளியாகவுள்ளது. குறித்த வர்த்தமானி நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. ...

மேலும்..

மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 255 பேர் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 255 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் பி.சீ.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை ...

மேலும்..

கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன்மேல் அரசியல் செய்வதற்கு இடமளிக்கபோவதில்லை- ஜனகன்

நாட்டுக்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன்மேல் அரசியல் செய்வதற்கு ஒருபோதும்  இடமளிக்க முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்களைக் களங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த ...

மேலும்..

3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்

3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடுவெலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ...

மேலும்..

ஐ.தே.க பிளவுபட்டுள்ளதால் பொதுத்தேர்தலிலும் எமது வெற்றி உறுதி- எஸ்.பி.திஸாநாயக்க

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால், நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொத்மலை பகுதியில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

கடந்த காலத்தை விடவும் அதிக ஆசனம் இம்முறை தமிழ்க் கூட்டமைப்பு பெறும்! மாவை சேனாதிராசா உறுதியான நம்பிக்கை

ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கனிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

நாட்டில் தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக தமிழர்கள் மாற வேண்டும்- சாணக்கியன்

நாட்டில் ஒரு தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக  தமிழர்கள் மாறும்போதே தமக்கான அபிவிருத்தியை நோக்கி செல்லமுடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாகவே காணிகள் சுவீகரிக்கப்பட்டன -சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாக, முல்லைத்தீவில் 25 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் அபகரித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பத்மநாபாவின் நினைவஞ்சலி நிகழ்வின்போதே அவர் ...

மேலும்..

மட்டக்களப்பில் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்கள் மற்றும் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் ...

மேலும்..

முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் 1200ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு- வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தொடர்போராட்டத்தின் 1200ஆவது நாளில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவினரின் அலுவலகத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு  போராட்டம் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், தம்மிடம் தமது ...

மேலும்..