சிறப்புச் செய்திகள்

பொதுத் தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு   88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக  மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஆவணி மாதம் 5ஆம் திகதி ...

மேலும்..

இனவாதிகளின் கருத்துக்களை அடக்கவேண்டும் கோட்டாபய! ஜனாதிபதிக்கு சம்பந்தன் எச்சரிக்கை

நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழுநாடும் பௌத்த சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டில் இனவாதிகள் கருத்து தெரிவித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர்களின் வாய்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அடக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஓர் ஆடி நிலம் ...

மேலும்..

குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!- யாழில் சம்பவம்

யாழ்.நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு  சென்றவரை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை, தாக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.40 மணியளலில் ஸ்டான்லி வீதி அத்தியடிச் சந்தி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ...

மேலும்..

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138ஆவது மைல் கல் இடத்தில் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ...

மேலும்..

வல்வெட்டித்துறையில் சுமார் 3 மணி நேரமாக இராணுவம் சுற்றிவளைப்பு

வல்வெட்டித்துறை, கெருடாவில்- சீலாப்புலம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர், கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை- கொம்மாந்துறையில், கடந்த வாரம் ...

மேலும்..

PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு  பிரமதர் அலுவலகம்  ஆலோசனை வழங்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக  பிரதமர் அலுவலகத் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது, ‘ குறித்த செயற்பாட்டுக்காக  8 ...

மேலும்..

வத்தளை- திக்கோவிட கடற்பரப்பில் நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

வத்தளை- திக்கோவிட கடற்பரப்பில் நீரில் மூழ்கி 4 பேர்  உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 16, 20, 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூவரும்,  14 வயது சிறுவன்  ஒருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி ...

மேலும்..

அரசியல் வாழ்க்கையில் நான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்- மஹிந்த

எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் 2015 தேர்தலில் கிடைத்த தோல்வி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப்புலிகளிற்கு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 65 நாட்களுக்கு பின்னர் நேற்றை தினம் முதல் தற்போது வரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ...

மேலும்..

சூரிய கிரகணம் இன்று: பொதுமக்களுக்கு கோள் மண்டலத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை

2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனை வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா  எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா ...

மேலும்..

மேலும் 289 பேர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த அனைவரும், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்தே, பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று இந்தியாவில் தங்கியிருந்த 194 ...

மேலும்..

கருணாவை உடனடியாகக் கைது செய்யுங்கள்: சிங்கள ராவய ஜனாதிபதியிடம் கோரிக்கை

இனப்படுகொலை செய்துள்ளதாக கருணாவே கூறியுள்ளார். ஆகவே அவரை  உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கோரியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

கடந்த அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனாவால் பலர் உயிரிழந்திருப்பர்- மஸ்தான்

கடந்த அரசாங்கம் இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால் மக்களில் அதிகமானோர் ‘கொரோனா’ வந்து இறந்திருப்பார்கள் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள சூரிய கட்டைகாட்டு ...

மேலும்..

ஆட்டநிர்ணயத்தை மறைப்பது ஒரு குற்றம் – லக்ஷமன் கிரியெல்ல

ஆட்ட நிர்ணயம் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்பு முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ...

மேலும்..