சிறப்புச் செய்திகள்

தமிழர் தாயகத்தை சிதைக்க கோட்டா கங்கணம்: மாவை கண்டனம்!

"வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி. தமிழர்களின் எத்தனையோ உயிர்த் தியாகங்கள் நிறைந்த இந்தப் புனித பூமியைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசும், சிங்களக் கடும்போக்காளர்களும் கங்கணம் கட்டிச் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதியோம். ...

மேலும்..

ட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்!

ட்ரோன் கமராவின் உதவியுடன்  அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு கஞ்சா தோட்டம் அழிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்கிழமை)  அதிகாலை கிடைத்த தகவலின்   மொனராகலை மாவட்டத்தில் தனமன்வில அடர்ந்த காட்டுப்பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் ...

மேலும்..

நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்கு குழு நியமனம்

நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக, மத்திய வங்கி மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.

மேலும்..

மணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து இன்று (புதன்கிழமை) காலை கவனயீர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மணற்காட்டுப் பகுதியில் உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 40க்கும் ...

மேலும்..

எழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்

அனலைதீவு, எழுவைதீவு இரண்டிற்குமாக போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட எழுதாரகை சேவையை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘எழுதாரகை’ சேவையில் ஈடுபடாமைக்கு அப்போதைய அரசாங்கமும் அதனுடன் இணைந்து செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுமே ...

மேலும்..

பொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா?

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் தொடர்ந்தால், அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தேர்தலை நடத்த முடியும் என்று ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு யோகேஸ்வரன் கோரிக்கை!

இம்முறை கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வாழைச்சேனை பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் ...

மேலும்..

சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மூன்று தடவைகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதை ...

மேலும்..

இராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்

இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசாங்கம் நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்தார். அத்துடன், இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி கல்வியின் ...

மேலும்..

கிரானில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பாலத்தில் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். நேற்று மாலை கிரான் -புலிபாய்ந்தகல் வீதியால் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமே இவ்வாறு ஆற்றினுள் பாய்ந்துள்ளது. இதன்போது அப்பகுதியில் ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்

ஊரடங்கு காலப்பகுதியில் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5,000 ரூபாய் கொடுப்பனவு உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்தார். பிரதி கணக்காய்வாளர் ...

மேலும்..

மாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பிரத்தியேக வகுப்புக்கள், தனியார் வகுப்புகள் உள்ளிட்ட மாணவர்களை ஒன்றுதிரட்டி வகுப்புக்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து வகுப்புக்களையும் உடனடியாக நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்தல் வழங்கியுள்ளது. குறித்து அறிவித்தலை மீறுவோருக்கு எதிராக ...

மேலும்..

இ.தொ.கா. கட்சிக்குள் குழப்பம் இல்லை: பொதுத் தேர்தலின் பின்னரே புதிய தலைவர்- கனகராஜ்

கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை எனவும் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த

உயர்தர பரீட்சையை நடத்த தீர்மானித்த திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஆசிரியர்கள், மாணவர்களின் அபிப்பிராயத்தை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..