சிறப்புச் செய்திகள்

வாழைச்சேனை கடதாசி ஆலையில் வேலை பெற்றுதருவதாக சிலர் பொய் கூறுகின்றனர் – ஜெயானந்தமூர்த்தி

தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக மீறி   சில அரசியல் வாதிகள் வாழைச்சேனை கடதாசி ஆலையில் வேலை பெற்றுதருவதாக, வீடுகள் அமைத்து தருவதாக காணிகள் பெற்றுத்தருவதாக விண்ணப்பங்களை சேகரித்து மக்களுக்கு  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பிரச்சசாரங்களில் ஈடுபடுகிறார்கள் என ஸ்ரீ பொதுஜன பெரமுனை வேட்பாளரும் ...

மேலும்..

தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த 4 சந்தேகநபர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேகநபர்களை நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ...

மேலும்..

அத்துமீறிய மீன்பிடி மூலம் கொரோனா அபாயம்- மாநகர பதில் முதல்வர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டு

அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடி மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உண்டு. மேலும் எம்மவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்படுகின்றது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன், ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) அவர் அனுப்பிய அக்கடிதத்தில் மேலும் ...

மேலும்..

அநுராதபுரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் தொற்று!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணொருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார். அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு ...

மேலும்..

ஆரம்பப் பாடசாலைகளைத் திறக்க தீர்மானம்

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் என்பன திறக்கப்படவுள்ளன. இதற்கான ஆலோசனைகளை ...

மேலும்..

ஊரடங்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இலங்கையிலும் கொரோனா வைரஸ் சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 3 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. ...

மேலும்..

கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் ஒருசிலரின் பொறுப்பற்ற செயலால் இலங்கையில் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் ...

மேலும்..

தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி

இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு (கிழக்கு) என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் வௌிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் ...

மேலும்..

போராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்! மட்டுவில் முன்னாள் போராளிகள் முன் மாவை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை வெல்லாவெளியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்திந்தார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

சாந்தி, மற்றும் சத்தியலிங்கம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலத்தில் விசேட வழிபாடு

விஜயரத்தினம் சரவணன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்பாளர்களான திருமதி.சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 15.06.2020 இன்றையநாள் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்திற்குரிய விளம்பர அட்டைகள் பூசையில் வைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. மேலும் இந்த ...

மேலும்..

வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கை

வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா ரயில் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா ரயில் நிலையத்திற்கு வருகை ...

மேலும்..

தியாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்குள் இன்று சுயநல அரசியலே இடம்பெறுகின்றது – கணேசமூர்த்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டிருந்தது ஆனால் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள்  அனைத்தையும் மறந்து தங்களின் சுயநல அரசியலை முன்னெடுத்துக்கொண்டு  தமிழ்மக்களை முட்டாளாக்கும் வேலைகளைச் செய்துவருகின்றனர் என  முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி   தெரிவித்துள்ளார். துறைநீலாவணையில் இடம் பெற்ற ...

மேலும்..

மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊ்டக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மருந்துகளின் விலைகளை, ‘அனுமதியின்றி அதிகரிக்கும் மருந்து ...

மேலும்..