சிறப்புச் செய்திகள்

சந்திரிக்காவுக்கும் மங்களவுக்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு சந்திரிகாவின் அத்தனகல்ல இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாகச் சில தினங்களுக்கு முன்னர் மங்கள அறிவித்திருந்த ...

மேலும்..

கேகாலையில் பாரிய தீ விபத்து – 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் ...

மேலும்..

ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை சட்ட நடவடிக்கை

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே, தனது சட்டத்தரணி ...

மேலும்..

இலங்கையில் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படும் சுற்றுலாத் தலங்கள்

தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவியதைத் தொடர்ந்து தேசிய மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் என்பன கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடு ...

மேலும்..

பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 129 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1282 என்ற விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானின் ...

மேலும்..

மாவை கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல்…

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் ...

மேலும்..

அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும் – ரிஷாட்

எதிர்வரும் தேர்தல் ஆளுங்கட்சிக்கு மாத்திரமன்றி, அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும்  என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையில் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், ...

மேலும்..

யாழில் கொரோனாவின் தாக்கத்தையடுத்து வேகமாகப் பரவும் காசநோய்

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், ...

மேலும்..

மட்டக்களப்பில் தேர்தல் ஒத்திகை வெற்றி – அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் தேர்தல் ஒத்திகை வெற்றியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான ஒத்திகை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவருக்கு யாழில் அஞ்சலி

யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். முச்சக்கர வண்டிகள் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஒன்று கூடிய முச்சக்கரவண்டி உறுப்பினர்கள் சிலர் இரண்டு நிமிட மௌன ...

மேலும்..

பரந்தனில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் பாதுகாப்பாக செயலிழப்பு

பரந்தன், முல்லைத்தீவு வீதியில் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள இராணுவ முகாம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடு, குறித்த பகுதியில் ...

மேலும்..

சட்டவிரோத பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ...

மேலும்..

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார். ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் ...

மேலும்..

குத்தகை நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- சுரேன் ராகவன்

நாடளாவிய ரீதியாக இயங்கும், சட்டபூர்வமற்ற குத்தகை நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கேட்டுக் கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

மாணவர்களுக்கு கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போசாக்கு உணவு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..