சிறப்புச் செய்திகள்

இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்- பிரசன்ன

பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன்  விரைவாக  அபிவிருத்தி செய்யப்படுமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

வல்லைவெளியில் வெடிப்பு: இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை, பொலிஸார் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் வல்லை இராணுவ முகாமுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் பொலிசாரின் விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகின்றது. வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திகை இன்று

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் குறித்த தேர்தல் ஒத்திகை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 200  வாக்காளர்களைக் கொண்டு குறித்த தேர்தல் ஒத்திகை  இன்று நடைபெறவுள்ளது. நீர்கொழும்பு செபஸ்டியார் வித்தியாலயத்தில், ...

மேலும்..

கொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1880 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை வழங்கப்படும்- மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் ...

மேலும்..

அரசியல் தீர்வுப் பேச்சுக்கு தமிழ்க் கூட்டமைப்பு தயார் நம்பும் வகையில் அரசே நடக்கவேண்டும்; மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

"தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். "பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுவது போன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள்தான். எனவே, எமது மக்களுக்குத் ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கிடையில் கலந்துரையாடல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியில் 7 வேட்பாளர்கள், புளொட் அமைப்பில் இருவர் மற்றும் ரேலோவில் ...

மேலும்..

பெரஹர நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

இம்முறை பெரஹர நிகழ்வுகளை பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில்  முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை என இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எமது பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு ...

மேலும்..

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு  தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச் சுதந்திரம் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது!

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை- தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லையென ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

தீர்க்கப்படாத காணிப் பிணக்குகள்: ஆளுநர் செயலக விசேட குழு கிளிநொச்சியில் விசாரணை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் ஆளுநர் செயலக விசாரணைக் குழுவினால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் நியமிக்கப்பட்ட இளைப்பாறிய நீதிபதி வசந்தசேனன் தலைமையிலான குறித்த குழு இன்று (வெள்ளிக்கிழமை) கண்டாவளை பிரதேச ...

மேலும்..

பிலிப்பைன்ஸில் இருந்து 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல்.1423 என்ற இலக்க விமானத்தில் பிலிபைன்ஸ் மணிலாவில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த 223 பேரும்,  ...

மேலும்..

முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய்- சுரேஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

பொதுத்தேர்தல்: சஜித் அணியின் வேட்பாளர்கள் மூவர் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவிருந்த  3 வேட்பாளர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர். அதாவது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளரான நிலூகா ஏக்கநாயக்க போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் ...

மேலும்..