சிறப்புச் செய்திகள்

சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தையில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீட்டிற்கான அடிக்கல் யாழ். ...

மேலும்..

போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லை- விமல்

நாடு கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லையென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டம் கலவரமாக மாறிய விடயம் ...

மேலும்..

இன்று முதல் பள்ளிவாசல்களை திறக்க தீர்மானம்!

பொது சுகாதார அதிகாரியின் பரிசோதனையினைத் தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பள்ளிவாசல்களை திறக்க முடியும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய சகல ...

மேலும்..

மன்னாரில் பாடசாலை ஒன்றில் தொழில்நுட்பக் கூடம் ஆளுநரால் திறந்துவைப்பு!

மன்னார், கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் கூடத்தை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்துவைத்தார். மடு கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக்கூடம் நேற்று (வியாழக்கிழமை) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ...

மேலும்..

மீண்டும் ஐ.தே.கவினை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் – சுஜீவ சேனசிங்க

மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

மிருசுவிலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: ஒருவர் காயம், நிறுவனமொன்றின் சொத்துக்கள் சேதம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது வாள்வெட்டுக் குழு ஒன்றினால் இரவுவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ...

மேலும்..

அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது – விமல்

அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது என மைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை விமானநிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்தவர் அமெரிக்க இராஜதந்திரி இல்லை. ...

மேலும்..

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் – ஜே.வி.பி!

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது, நாட்டை ஆளும் ...

மேலும்..

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – அனில் ஜாசிங்க

முன்னணி சோசலிஷ கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டங்களின் போது சமூக இடைவெளி மற்றும் ...

மேலும்..

கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றமடைகிறது அக்கராயன் வைத்தியசாலை!

தேசிய பேரிடர் நிலைமையினை கருத்திற்கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றமடையவுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சு கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பிரகாரம் ஏற்கனவே அறியத்தரப்பட்டதற்கமைய கொரோனா சிகிச்சை ...

மேலும்..

ஜனாதிபதி செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து – லால் விஜயநாயக்க

ஜனாதிபதி உருவாக்கிய செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவமயப்படுத்தலினையும், அரசமைப்பிற்கு வெளியே அமைப்புகளை உருவாக்குவதற்குமான முயற்சி இதுவென்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முப்படையினர் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய, பரந்துபட்ட அதிகாரங்களை உடைய ...

மேலும்..

யாழில் கடலில் மிதந்துவந்த 57 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணம், இளவாலை கடற்பரப்பில் கடலில் மிதந்துவந்த நிலையில் 57 கிலோ கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இளவாலை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மர்மப் பொருட்கள் மிதந்துவந்த நிலையில் அதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மூட்டைகளை சோதனையிட்டுள்ளனர். அப்போது அதற்குள் கஞ்சா ...

மேலும்..

முடியுமானால் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – தலதா அத்துகோரல

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல, முடியுமானால் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல பகிரங்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

காவிரி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரைத் திறந்து வைத்தார். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் ...

மேலும்..

தமிழ் மருத்துவரின் கொரோனா மருந்து கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் வசந்தகுமார் கண்டுபிடித்த 2 ரூபாய்க்கான கொரோனா மருந்து குறித்து விரைவாக பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வைத்தியர், சென்னை உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் நீதிமன்ற்ம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வைத்தியரின் மனுவில், ...

மேலும்..