சிறப்புச் செய்திகள்

மக்கள் எதிர்பார்த்தது போன்று ஐ.தே.க. வேட்பாளர்களில் அதிகளவில் புது முகங்கள்- ஆசு மாரசிங்க

மக்கள் எதிர்பார்த்தது போன்று புதிய உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான சந்தரப்பத்தை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியுள்ளது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் ...

மேலும்..

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்த முடியாது- மன்னிப்புச்சபை

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த காலங்களிலும் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது தேவையற்ற வன்முறைகள் அல்லது தாக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றுக்கு நீதியும் வழங்கப்படவில்லை எனவும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் “மக்கள் ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவின் கடந்தகால செயற்பாடுகள் புதிய நாடாளுமன்றத்தில் கவனிக்கப்படும்- அனுராத ஜயரத்ன

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடந்த காலத்தில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், பக்கச் சார்பாகவும் அமைந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு கவனம் செலுத்தப்படும் ...

மேலும்..

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1875 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிரு இலங்கை கடற்படையினர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்..

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு!

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நாளை வெள்ளிக்கிழமை வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...

மேலும்..

6 மாதங்களுக்கு கடன் அறவீடு வேண்டாம்!- கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

6 மாதங்களுக்கு கடன் அறவீடு மேற்கொள்ளப்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி, பூநகரி, வலைப்பாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க இளைஞர், யுவதிகளினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் ஏற்பட்ட ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்ட வைத்தியருக்கு விளக்கமறியல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 79 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை இன்று (வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தியபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் ...

மேலும்..

அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு- கிராமமட்ட அமைப்புக்கள் மகஜர்

அக்கராயன் வைத்தியசாலையை வட மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராமமட்ட அமைப்புக்கள் இணைந்து மகஜர் கையளித்துள்ளன. கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்தே குறிதத் மகஜர்களை இன்று (வியாழக்கிழமை) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க ...

மேலும்..

ஆர்ப்பாட்டங்களை தடுக்க மாற்றுவழி – ஜனாதிபதி ஆலோசனை

எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு தாக்குதல் நடத்தாது மாற்று வழிகளூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார். முன்னிலை ...

மேலும்..

யாழில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பெண்ணொருவர் கைது!

யாழில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்திலில் ஈடுபட்டதாக பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிற்கும் சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 50 கிராம் ...

மேலும்..

வாக்குச் சீட்டுக்களின் அளவு குறித்த விபரம்

பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அகலமான வாக்குச் சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சீட்டுக்கள் கம்பாஹா, யாழ்ப்பாணம், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ...

மேலும்..

வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பு

பனை அபிவிருத்திச் சபையினை பல்வேறு வகையில் தரம் உயர்த்துவதற்குரிய வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பீ.ஏ.கிருசாந்த பத்திராஜா தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

நடுத்தர வகுப்பினரின் வருமானத்திற்கு வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கத் திட்டம்

தொழிலுக்காக தூர இடங்களிலிருந்து வரும் நடுத்தர வகுப்பினருக்கு தங்குமிட வசதிக்காக வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் ...

மேலும்..

சதிகாரர்களை தோற்கடிக்கத் தவறினால் அம்பாறையில் தமிழர் பிரதிநிதியை இழக்க நேரிடும்- வேட்பாளர் கணேஸ்

சதிகாரர்களை தோற்கடிக்கத் தவறினால் அம்பாறையில் தமிழர் பிரதிநிதியை இழக்க நேரிடும் என அம்மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்கு வங்கி மூன்றாம் நிலையில் இருக்கின்றது எனவும் பலர் தேசியக் கட்சிகளின் ...

மேலும்..

தமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு- சுமந்திரன்

தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் அதை வழங்கத் தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்கள் ...

மேலும்..