சிறப்புச் செய்திகள்

மடுத் திருத்தலத்தின் ஆடி மாதத் திருவிழாவிற்கான முன்னாயத்தம் குறித்து கலந்துரையாடல்!

மன்னார் மறைமாவட்ட ஆயரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. திருவிழா முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ...

மேலும்..

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு – சஜித்

முன்னிலை சோசலிஷக் கட்சி நடத்திய போராட்டத்தின் மீதான தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரானது என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புலொய்ட் என்பவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் ...

மேலும்..

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் 2020: ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் விபரம் அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் நிலையில் அதன் வேட்பாளர்களின் பெயர்களும் அவர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்களும் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அப்துல் சமியூ முகம்மது பஸ்மி – ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பு வெளியீடு

பொது தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 201 கடற்படை வீரர்கள் வீடு திரும்பினர்

வவுனியா – பம்பைமடு மற்றும் பெரியகாடு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்களில் சிலர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய குறித்த முகாம்களில் 20 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்ட 201 கடற்படை வீரர்களே இன்று (வியாழக்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். பம்பைமடு இராணுவ ...

மேலும்..

மாணவர்களுக்கான சீருடை வழங்கும் முறைமை குறித்து தீர்மானிக்க குழு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடையை வழங்கும் முறைமை தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அது குறித்து ...

மேலும்..

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையை அரசியல்வாதிகள் மீண்டும் கட்டியெழுப்பவில்லை- சுமணரட்ன தேரர்

நாடாளுமன்றத்தில் 30 வருட காலமாக எமது அரசியல்வாதிகள் தூங்கி விழுந்தார்களே தவிர யுத்ததிற்கு முகங்கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவில்லை என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுமணரட்ன தேரர் களமிறங்கியுள்ளது ...

மேலும்..

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு நாமல் கண்டனம்

அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகிலும் லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் பிலொய்ட் கொல்லப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ...

மேலும்..

உலக சமாதான சுட்டியில் இலங்கை 5 இடங்கள் பின்தள்ளப்பட்டது

2020 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 77 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 72ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இம்முறை இலங்கை 5 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. உலக ...

மேலும்..

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றால் தொடர்ச்சியாக மூன்று நாளாக உயிரிழப்பு பதிவாகவில்லை!

ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், கடந்த மூன்று நாட்களாக எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதன்மூலம், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என ஸ்பெயின் பாராட்டப்பட்டு வருகின்றது. கடந்த 24 மணித்தியாலத்தில் ...

மேலும்..

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

பிரேஸிலில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 33,100பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,300பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றால் 472பேர் பாதிப்பு- 63பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 472பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 63பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,960பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ...

மேலும்..

நாட்டில் மழையுடனான காலநிலை நீடிக்கும்

நாடு முழுவதும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கடந்த ...

மேலும்..