சிறப்புச் செய்திகள்

CIDயின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை கொலை செய்ய தீவிரவாதிகள் முயற்சி? – விசாரணை ஆரம்பம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை கொலை செய்வதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. குறித்த விசாரணைகளை எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு  ...

மேலும்..

தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு இதேநாளில் விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் ...

மேலும்..

கடற்படையினர் உட்பட 10 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 1869 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 8 பேர் கடற்படையினர் என்றும் அதில் 7 பேர் கிளிநொச்சி – இயக்கச்சி ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே அரச ...

மேலும்..

சுகாதார பிரிவின் விதிமுறைகளுக்கு அமையவே தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற வேண்டும் – பொலிஸ்

சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவே பொதுத் தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ...

மேலும்..

கொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு நேற்று (புதன்கிழமை) மாலை ஹட்டன் நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். கொட்டகலை நகரிலிருந்து ...

மேலும்..

வவுனியாவில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமம் – அலுவலர்கள் பொதுமக்களுக்கிடையே குழப்பம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கச் செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் ...

மேலும்..

புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி உட்பட மூவர் கைது

வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிகொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உள்ளிட்ட மூவர் பொஹஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கிப்புல்கல மலைப்பகுதியில் சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு புதையல் தோண்டுவதாக பொஹவெஸ்வாவே பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...

மேலும்..

கதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்

திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் 11 நாளான இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பு வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலங்களில் நிறுத்தப்பட்டதுடன் பாதையாத்திரை தொடர்பாக எந்தவெரு ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலால் குழப்பம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 1991 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு – பட்டங்கள் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறியுள்ள நிலையில், கணினி விஞ்ஞானத் துறையைப் புதிய துறையாகப் பிரகடனப்படுத்தும் உயர்கல்வி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலால் குழப்ப ...

மேலும்..

கொரோனாவினால் வெறிச்சோடியது நிலாவெளி கடற்கரை

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிப்பது சுற்றுலாத்துறை ஆகும். அத்துறையில் தனக்கென ஓர் இடத்தினை வகிப்பது திருகோணமலை – நிலாவெளி கடற்கரை பிரதேசமாகும். என்றுமே சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் நிலாவெளி கடற்கரையானது தற்போது நிலவி வரும்சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ...

மேலும்..

தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதலில் உயிரிழப்பு

மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன என்பரே உயிரிழந்துள்ளார். மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ...

மேலும்..

இலங்கையில் வெட்டுக்கிளிகளின் பரவலை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை

நாட்டின் சில பாகங்களில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளின் பரவலை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வேதியியல் முறைமை உள்ளிட்ட ஏனைய சில முறைகள் குறித்து விவசாயிகளை தெளிவூட்டுவதன் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியும் என விவசாய திணைக்களத்தின் ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கான விசேட கூட்டம் இன்று பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி

வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ...

மேலும்..