சிறப்புச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே 61 கையடக்கத் தொலைபேசிகள்இ 51 சிம் அட்டைகள்இ 30 மின்கலங்கள் மற்றும் ...

மேலும்..

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, தர்மபுரம் சுகாதார சேவைகள் பணிமனை ஆகியன இணைந்து சிரமதான பணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த சிரமதான பணி 100க்கு மேற்பட்ட ...

மேலும்..

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்..

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பேருந்துகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பேருந்து போக்குவரத்தை முன்னெடுப்பது கட்டாயமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆசனங்களுக்கு மேலதிகமாக ...

மேலும்..

மிலேனியம் தொடர்பான விசேட குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்- ஜே.வி.பி

மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி, ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியினால், ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவிற்கே இந்த ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுகின்றது

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் ஓகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மூடப்பட்டிருக்கும் ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை நிறைவு

பிலிப்பைன்ஸில் இருந்து 80 மாணவர்கள் நாடு திரும்பினால், வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 80 மாணவர்கள் அடங்களாக 250 பேர் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) பிலிப்பைன்ஸில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர் என ...

மேலும்..

உலக சுற்றுச்சூழல் தினம் – யாழ்.மாவட்டச் செயலகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் பயன்தரும் மரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் வளாகத்தில் மாவட்டச் செயலர் மரக்கன்று ஒன்றிணை நாட்டி ...

மேலும்..

கிளிநொச்சியில் “நாட்டிற்காக நாம் ஒன்றாய்” தேசிய விழிப்புணர்வு செயற்திட்டம்

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால் “நாட்டிற்காக நாம் ஒன்றாய்” தேசிய விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறிதத் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் பரந்தன் சந்தியில் இடம்பெற்றது. இதன்போது விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துண்டுபிரசுரங்களும் ...

மேலும்..

அரசியல் தீர்வுக்கான திட்டம் உள்ளது…. தமிழர்களுக்கு தீர்வு உறுதி என்கின்றார் பிரதமர்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய நாடாளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைவு தயாரிக்கப்படும் என்றும் அதை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை ...

மேலும்..

இலங்கையில் கருத்து சுதந்திரம்: ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு

இலங்கையில் கருத்து சுதந்திரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளிற்கான பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு ...

மேலும்..

முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு

உடற்பயிற்சியின்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமூக இடைவௌியை மாத்திரம் பேணுதல் போதுமானது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். தனியாள் மற்றும் நடைபாதை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அதிக ஒட்சிசன் தேவைப்படுவதால் முகக்கவசம் ...

மேலும்..

மக்கள் ஒன்றுகூடலை தவிர்க்க இரவு நேரங்களில் ஊரடங்கு தொடரும்

நாடுமுழுவதும் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணிமுதல் அதிகாலை 04 மணி வரையான ஊரடங்கு உத்தரவு இந்த வாரமும் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் முகமாக இந்த வாரம், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாது என ஆங்கில ஊடகம் ...

மேலும்..

12 மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நடத்த தீர்மானம்

பன்னிரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி தேர்தல் ஒத்திகை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் நோக்கில், இந்த ஒத்திகை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை, களுத்துறை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் வகுத்த வியூகத்தில் பயணித்தால் பொதுத்தேர்தலில் தோல்வியையே சந்திக்க நேரிடும்- ரணில்

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வகுத்த வியூகத்தில் பயணித்தால், பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோல்விதான் கிடைக்கும் என அந்தக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். ...

மேலும்..