சிறப்புச் செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் ...

மேலும்..

மாத்தளையில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மாத்தளை – மஹவெல –  ஹதமுனகல பிரதேசத்தில் மின் கம்பிகள் அறுந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விற்பனைக்காக பலா உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் ...

மேலும்..

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி: கூட்டமைப்பின் அறிக்கை

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகள் தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் ஜனாதிபதி செயலணி தொடர்பாக தமது நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் பூர்வீக ...

மேலும்..

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வம்

வடக்கில் புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும் நஸ்டஈடு வழங்க அரசாங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்கப்படுமென  யாழ்.மாவட்ட அரசாங்க ...

மேலும்..

அமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்

பி.சி.ஆர். சோதனைக்கு உட்பட மறுத்ததன் மூலம் அமெரிக்க அதிகாரி, தூதரக உறவுகள் தொடர்பான இராஜதந்திர பிரகடனத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளார் என ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி நாட்டிற்குள் வந்தபோது பி.சி.ஆர். சோதனைக்கு உட்பட ...

மேலும்..

பதுளையில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

பதுளை – மடுல்சீமை கெரடி எல்லயில் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) மூவரும் நீராட சென்றபோதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (38), மகள்(12) ...

மேலும்..

மட்டு.தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி போராட்டம்

மட்டக்களப்பு- தாழங்குடாவிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் குறித்த கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முதல்வரை இடமாற்றியதை இடைநிறுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று இன்று (சனிக்கிழமை) பகல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம், கல்வியில் ...

மேலும்..

சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை ...

மேலும்..

இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களுக்கு பரவியுள்ள வெட்டுக்கிளிகள்

குருநாகல் மாவத்தகமை பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் தற்போது 5 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இவ்வாறு வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் பாலைவன வெட்டுக்கிளி ...

மேலும்..

மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ள மன்னார் புதிய பேருந்து நிலையம்

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய கட்டடம், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாளை (ஞாயிற்றக்கிழமை) உத்தியோக பூர்வமாக மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின், சுமார் 130 மில்லியன் ...

மேலும்..

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (சனிக்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் ...

மேலும்..

இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை: லெபனான் அரசு

இலங்கை பணியாளர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனையை மேற்கொள்ள லெபனான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன மற்றும் லெபனான் தொழில் அமைச்சர் லமினா யமினி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாடு திரும்பும் முன்னர் ...

மேலும்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் மன்னாரில் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு இரண்டு பேர் வந்த நிலையில், அவர்களை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக ...

மேலும்..

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்

முகக்கவசங்கள் அணிவது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் சனநெரிசல் காணப்படும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும உடல் ரீதியாக முழு ...

மேலும்..