சிறப்புச் செய்திகள்

மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்

நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பட்டப்படிப்பிற்கு தகுதி பெறும் மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் ஏனைய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வியற்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுகின்றனர். இந்நிலையில், ...

மேலும்..

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச் செயலாளர் ...

மேலும்..

அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்!

விமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது ஒத்துழைப்பும் முன்னரை விட அதிகமாக மரியாதையும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் சர்வதேச தோற்றுநோய் பரவலின் ...

மேலும்..

பரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்!

பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இதற்கென தெரிவுசெய்யப்பட்ட 200 வாக்காளர்களை கொண்ட பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வாக்காளர்கள் செயற்படும் விதம், அவர்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்கு அமைவான ...

மேலும்..

அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்!

அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 16ஆம் திகதி வரை சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 13 வயது சிறுமியை ...

மேலும்..

நாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களும் நாளை(சனிக்கிழமை) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை நாட்டிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து ...

மேலும்..

இலங்கையர்கள் பூரண சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்

பூரண சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது. இன்றிரவு(வெள்ளிக்கிழமை) 11.15 முதல் நாளை அதிகாலை 2.34 வரை இந்த பூரண சந்திரகிரகணம் தோன்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை அதிகாலை 12.56 அளவில் இந்த சந்திரகிரகணம் முழுமையடையவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் ...

மேலும்..

ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவின்றி கருத்து வெளியிடுவதை நிறுத்தவேண்டும்.முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் பொதுபலசேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரவித்துள்ளார். அத்தோடு வடகிழக்கு தாயகப் பரப்பில் இராணுவம் நிலைகெண்டிருப்பதை எப்போதும் தாம் ஏற்றுககொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். வட,கிழக்கு ...

மேலும்..

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்  கையொப்பமிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எவ்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா,  உப தலைவர் செந்தில் ...

மேலும்..

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை நிகழ்வொன்று இன்று (வெள்ளிக்கிழமை)  காலை இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் மூன்றுமுறிப்பு பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், வர்த்தகசங்க ...

மேலும்..

வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை!

வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு பொலிஸ் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 797 தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த 42 கடற்படை வீரர்களும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 03 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 17 கடற்படையினர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 17 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 443 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் ...

மேலும்..