சிறப்புச் செய்திகள்

கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் கொரோனா பரவல் காலத்தில் கருத்து சுதந்திரம் ...

மேலும்..

மேலும் 03 பேர் குணமடைந்தனர் – மொத்த எண்ணிக்கை 839 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 03 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 839 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 1749 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது 899 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் ...

மேலும்..

சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினர் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து

கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த அனுமதியை இரத்து செய்யும் அமைச்சரவை தீர்மானத்திற்கு இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான ...

மேலும்..

வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண் வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பாத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தினை சேதப்படுத்திய வெளிநாட்டவர் மனநலம் குன்றியவர் என தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவர் என்று தெரிவித்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். ...

மேலும்..

வாள்வெட்டு குழு சந்தேக நபர்களை அடையாளம் காட்டினார் சாட்சியாளர்!

யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களில் மூவரை சாட்சி அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து 6 சந்தேக நபர்களின் விளக்கமறியலும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. நல்லூர் முத்திரைச்சந்தியில் கடந்த மே ...

மேலும்..

தி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு

தி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ...

மேலும்..

குளவிகள் கொட்டியதில் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று(வியாழக்கிழமை) இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த 10 பேரும் தொடர்ந்தும் ...

மேலும்..

கொழும்பில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றும் நாளை மற்றும் 06, 07ஆம் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் ...

மேலும்..

இராணுவத்தின் பிடிக்குள் நாடு காய் நகர்த்துகின்றார் கோட்டா! கடும் சீற்றத்துடன் சுமந்திரன்

தேசிய ரீதியில் படைத்தரப்பை மட்டும் கொண்ட விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றையும், கிழக்கில் தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் படைத் தரப்பினர், பிக்குமார் உள்ளிட்ட சிங்களவர்களை மட்டும் கொண்ட விசேட செயலணி ஒன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கியுள்ளர். இவைநாட்டை சிங்கள மயமாக்குதல், ...

மேலும்..

நல்லூரில் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞன் கைது!

நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது நல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா

பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழாவின் விசேட பூஜை அபிசேகங்கள் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளன. திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கல் தலைமையில் விசேட பூஜை அபிசேகங்கள் இடம்பெற்றன. குறைந்த அளவிலான பக்தர்கள் ...

மேலும்..

ஹூல் மீது அழுத்தம்: கண்டிக்கிறார் ரிஷாத்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தேர்தல்கல் ஆணைக்குழுவின் ...

மேலும்..

போராட்டத்தின் வலி, சுமை, தாக்கம் தெரியாதவர் சுமந்திரன் – விந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரெலோ முன்னின்று அழுத்தங்களை பிரயோகிக்கும் என அந்த கட்சியின் முக்கியஸ்தரான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் ...

மேலும்..

வாகனேரி குளத்துமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனை – வாகனேரி குளத்துமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...

மேலும்..