சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் நெற்செய்கை காணி தொடர்பில் நீண்ட ...

மேலும்..

நாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,628 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07 பேர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ஒருவர் கடற்படை வீரர் என்றும் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அஞ்சலிப் பதாதைகள்

மறைந்த அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அஞ்சலிப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. கடந்த 26ம் திகதி திடீர் மரணம் எய்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ...

மேலும்..

மட்டக்களப்பில் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 16,ம் ஆண்டு நினைவு வணக்கம்!

நாட்டுப்பற்றாளர் மட்டக்களப்பு ஐயாத்துரை நடேசன் அவர்களின் 16, ம் ஆண்டு நினைவு வணக்கம் இன்று 31!05/2020, மட்டக்களப்பு ஊடக அமையத்தில் அதன் தலைவர் வ.கிருஷ்ண்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும , ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைபடுத்தவும் அரச உயர் மட்டம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ...

மேலும்..

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பில் கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ...

மேலும்..

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை ...

மேலும்..

இதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

இலங்கையில் இதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 1,727 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தவருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் ...

மேலும்..

நாவாந்துறையில் மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீ வாய்ப்பு

நாவாந்துறை – காக்கைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் உக்கக் கூடிய திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீவைக்கப்பட்டுள்ளது. காக்கைதீவுப் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தி இயற்கை பசளைகளை உற்பத்தி செய்யும் நிலையத்தில் இந்தச் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11,056 பேர் வரையில் வெளியேறினர்

நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11,056 பேர்  வரையில் வெளியேறியுள்ளதாக கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154 பேர் தனிமைப்படுத்தலில் ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் – வெளிவிவகார அமைச்சு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரொனா பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாடுகள் விமான நிலையங்களைக் கூட இன்னும் திறக்கவில்லை. தற்போது வழமையான விமான ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மேலும் 20 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 1620 பேர் ...

மேலும்..

ஊரடங்கு வேளையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொலிஸாரின் அனுமதியை பெற்றவர்கள்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உடலின் உஷ்ணத்தை அளவிட்ட ...

மேலும்..

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு  யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் இதன்போது, யாழ். ...

மேலும்..

பாடசாலைகளில் விசேட வசதிகளை ஏற்படுத்த போதுமான அமைச்சிடம் நிதி இல்லை..!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு போதுமான நிதி அமைச்சிடம் இல்லை என அறிய முடிகின்றது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ...

மேலும்..