சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்

கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார் நெடுந்தீவு- குறிகட்டுவான் இடையிலான படகு சேவைகள் வழமைபோன்று இடம்பெறும். வட.தாரகை காலை 8 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு மாலை ...

மேலும்..

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு

வவுனியா- ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் காணியிலிருந்து வெடிபொருட்களை  பொலிஸார் இன்று (சனிக்கிழமை) கண்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியிலுள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம்  ஊடாக பண்படுத்தியுள்ளார். இதன்போது பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை ...

மேலும்..

சூரியனின் விழுதுகள் நிகழ்வில் சம்பந்தனின் செவ்வி (வீடியோ)

https://www.facebook.com/varatharajah.nitharsan/videos/2645884345526778/

மேலும்..

உண்மை, நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்வு கிடைப்பதை கோட்டா தடுக்கமுடியாது! இடித்துரைக்கின்றார் இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவால் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ...

மேலும்..

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

கொவிட் 19 கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாகவும் சுகாதார முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடலொன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் – சஜித்

நாடாளுமன்றை மீளக்கூட்டி, நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், மக்களை திசைத்திருப்பும் கருத்துக்களைத்தான் அரசாங்கம் ...

மேலும்..

மன்னாரில் பனை சார் உற்பத்தி தொழிலை மேற்கொள்வோர் தொடர்ந்தும் பாதிப்பு

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மன்னார் தீவுப்பகுதிக்குள் பனை உற்பத்தி சார்ந்த தொழிலை மேற்கொள்ளும் சுமார் 8 கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கூலித்தொழிலையும் விறகு வெட்டுதல், ...

மேலும்..

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக ஏற்கமுடியாது- சிவமோகன்

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக  ஒருபோதும் ஏற்க முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் இராணுவ பின்னணியையுடையவர் என்றும் செய்தி வெளியாகியுள்ளமைக்கு பதிலளிக்கும் வகையில்  ...

மேலும்..

மலையகத்துக்கு விடுதலை வேண்டும்: மட்டக்களப்பில் தனிநபர் போராட்டம்

மலையக மக்கள் இதுவரைப்பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று, மலையகத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க  வேண்டுமென கோரி தனிநபரொருவர் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தில்  இன்று (சனிக்கிழமை) காலை முதல் ஈடுபட்டுள்ளார். நுவரெலியா- பூண்டுலோயாவைச் சோ்ந்த சண்முகம் மகேஸ்காந் (26 ...

மேலும்..

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 89 வயதில் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 27 பேர் மீண்டனர்

நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து 781 பேர் வெளியேறியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ...

மேலும்..

புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுளள ஊடக அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “வெளிநாடுகளில் குறிப்பாக தமது சட்ட ரீதியான அந்தஸ்த்துக்களை மற்றும் / அல்லது ...

மேலும்..

யாழில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அன்னாரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி ...

மேலும்..

பலத்த பாதுகாப்புடன் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது தொண்டமானின் பூதவுடல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பலத்த பாதுகாப்புடன் இன்று (சனிக்கிழமை) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரபட்ட அன்னாரின் பூதவுடல் நேற்று, வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் ...

மேலும்..

இந்தியா, அவுஸ்ரேலியாவிலிருந்து 304 பேர் நாடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இலங்கைக்கு வர முடியாமல், அவுஸ்ரேலியாவிலும் இந்தியாவிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 304 பேர் இன்று நாட்டினை வந்தடைந்துள்ளனர். ரீலங்கன் எயார்லைன்ஸின் 02 விசேட விமானங்கள், இன்று (சனிக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. முதலில் ...

மேலும்..