சிறப்புச் செய்திகள்

முகக் கவசம் அணிவது குறித்து சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு

இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு முகக் கவசம் அணிவதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பது குறித்த சுகாதார அமைச்சு 46 வகையான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. குறித்த ஆலோசனைகளிலேயே இந்த விடயம் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு ஏற்படுவது தொடர்பாக இவ்வாறு 2 ...

மேலும்..

யாழில் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி

யாழில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டஅரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அஞ்சலி செலுத்தினர்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் அஞ்சலி

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு இன்று (வியாழக்கிழமை) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரபுரம் மக்களின் ஏற்பாட்டில் சிவகாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில், அன்னாரது ஒளிப்படத்திற்கு நினைவு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 13 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதற்கமைய இதுவரை 745 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை 1469 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 714 பேர் ...

மேலும்..

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு

நாட்டில் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களை ஆன்மீக இறை வழிபாடுகளிலும் ஈடுபட அனுமதியுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிலுள்ள  வழிபாட்டிடங்களைத் திறக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் ...

மேலும்..

போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் களனி புலுகங்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான ஆயிரத்து 900 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. களனி பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ...

மேலும்..

தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த விசாரணைகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு

இலங்கை முழுவதும் எதிர்வரும் 31ஆம் திகதி  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அனுமதி!

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் – சிவசக்தி ஆனந்தன்

மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து ...

மேலும்..

மேலும் 7 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்!

மேலும் 7 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். கடற்படை பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரையில் 351 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் விரைவில் தகுதியுடையவரால் நிரப்பப்பட வேண்டும் – சி.வி.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் விரைவில் தகுதியுடையவரால் நிரப்பப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அவர் மேலும் ...

மேலும்..