சிறப்புச் செய்திகள்

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று முற்பகல் 10.15 முதல் 11.30 வரையில் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் ...

மேலும்..

அஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கு தேவையான மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற தேர்தல் 2020 அரசியல்வாதிகள், முன்னாள் ஆளுநர்களுக்கான மெய் பாதுகாப்பு அதிகாரிகளை ...

மேலும்..

இலங்கையில் தாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1469 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 150 கொரோனா நோயாளிகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களுள் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான 8ஆம் நாள் விசாரணை இன்று

ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் எட்டாவது நாளாகவும் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புனவேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, பியந்த ஜயவர்தன மற்றும் ...

மேலும்..

மலையகத்தின் மிடுக்கு மரணித்துப் போனது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் மலையக மக்களின் வாழ்வுரிமையையும் அரசியல் அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்த மாமனிதர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் பேரனாக அவரது பொறுப்புக்களை சுமந்து மலையகத்தின் மிடுக்காக வலம்வந்த ஒரு அரசியல் ஆழுமையான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பின்மூலம் மலையகத்தின் மிடுக்கே இன்று ...

மேலும்..

அமரர் ஆறுமுகம் தொண்டமான் விடுதலைப்புலிகள் மீதும் மதிப்பு வைத்து செயல்பட்டவர்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ,

அமரர் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களுக்கு மலைபோல் அரணாக இருந்து செயல்பட்டாலும் விடுதலைப்புலிகள்மீதும் மதிப்பு வைத்து செயல்பட்டவர் அவரின் இழப்பு வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கும் பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் வதிவிடத்தில் பூதலுடல் நேற்று ...

மேலும்..

வவுனியா வெடிவிபத்தில் சிறுவர்கள் இருவர் காயம்!

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த ராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிகொண்டிருந்த இரு சிறுவர்கள் இனம் தெரியாத பொருள் ...

மேலும்..

யாழ். மீசாலை சந்தியில் விபத்து – மூவர் படுகாயம்

தென்மராட்சி-மீசாலை சந்திப் பகுதியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் -துவிச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை சந்தி ஊடாக துவிச்சக்கரவண்டியில் சிறுவன் ஏ-9 வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் யாழில் இருந்து கொடிகாமம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ...

மேலும்..

நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ...

மேலும்..

இன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு

இலங்கையில் இன்றைய தினம் இரவு 8.00 மணிவரையான காலப்பகுதியில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 134பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை மொத்தமாக 1,453 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று இனங்காணப்பட்ட நோயாளர்களில் 81 பேர் வெளிநாடுகளிலிருந்து ...

மேலும்..

அச்சுவேலியில் மரம் அரியும் நிலையத்திற்கு விசமிகள் தீ வைப்பு

அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் ...

மேலும்..

அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்!

நக்கீரன் இந்த மாதத் தொடக்கத்தில் (மே 08)  சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என அறிக்கையொன்றை விட்டுள்ளார்  தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன். இது  தொடர்பாக அவர் வெளியிட்ட  அறிக்கையில் "கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை காலை 11.45 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்படவுள்ளது. அதேநேரம் அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோர்வுட்டில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. திடீர் உடல்நலக் குறைவினால் அமைச்சர் ஆறுமுகன் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு இலங்கை மக்களுக்கு பேரிழப்பு- தமிழக முதலமைச்சர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு  அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..