சிறப்புச் செய்திகள்

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தரமற்ற கட்டடப்பணிகள் இடம்பெற்று வருவதாக மக்கள் சாடல்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தரமற்ற கட்டடப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த கட்டுமான பணியில் தமக்கு திருப்தி இல்லை என வீட்டுத்திட்ட பயனாளிகள் அதிருப்தி வெளியிடுகின்றனர். குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 668 வீடுகள் கட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2017ம் ...

மேலும்..

38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி

கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் – ஸ்ரீதரன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த ...

மேலும்..

ராஜித சேனாரட்னவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இன்று (புதன்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதற்கமைய ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பிணை மனு தொடர்பான தீர்மானம் ...

மேலும்..

குகுலே கங்கையின் இரு வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக குகுலே கங்கையின் இரு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. வெத்தாகல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக, குகுலே கங்கை ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இரா.சம்பந்தன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 712 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1319 ...

மேலும்..

மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது – இரா.சம்பந்தன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பு – வேலுகுமார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார். அவர் ...

மேலும்..

கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடுங்கள் – மனோ வலியுறுத்து!

கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனரீதியாக கூர்மையாக்கப்பட்டுள்ள ...

மேலும்..

கொரோனா குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்களில் பொய் இல்லை – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் பிழையானவை வேண்டுமென்றே குறைத்து காண்பிக்கப்படுபவை என சுயாதீன தொழில்சார் நிபுணர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையில், இலங்கையில் தற்போது ...

மேலும்..

இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. உரும்பிராய் பகுதியில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, ...

மேலும்..

யாழில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் வீடு திரும்பினார்

யாழில். கொரோனா தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்த ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார். சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்னவின் பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜித சேனாரட்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார். சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்னவின் பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் ...

மேலும்..