சிறப்புச் செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..!

இந்தவருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே 21 வரை மொத்தம் 19 ஆயிரத்து 474 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இம்மாதம் மூன்றாம் வாரத்தின் முடிவில், நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 485 ...

மேலும்..

பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 5000 பேருந்துகளுக்கும் அதிகமான பேருந்துகளை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க ...

மேலும்..

கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக ...

மேலும்..

மேல் மாகாணத்தில் இருந்து மேலும் 3000 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேல் மாகாணத்தில் இரண்டு மாதங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்த மேலும் 3,000 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 2,000 பேர் பிலியந்தலவில் ...

மேலும்..

அம்பாறையில் கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நீலாவணை, மருதமுனை, கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல்கொந்தளிப்பு நிலையுமே இதற்கான காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல் ...

மேலும்..

20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல்; 8,170 பேருக்கு எதிராக அபராதம்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18 ஆயிரத்து 614 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, ...

மேலும்..

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மீது அரசாங்கம் வரி சுமைகளைத் திணிக்கிறது – வேலுகுமார்

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்கள் மீண்டெழுவதற்கு நேசக்கரம் நீட்டவேண்டிய அரசாங்கம், அவர்கள் மீது வரி சுமைகளைத் திணித்து மனிதநேயமற்ற வகையில் ஆட்சியை முன்னெடுக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி ...

மேலும்..

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 1,347 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தவருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் ...

மேலும்..

கிளிநொச்சியில் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னர், ...

மேலும்..

நாடு முழுவதும் 4,649 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் – இராணுவத் தளபதி

நாடு முழுவதும் உள்ள 41 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4,649 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த 31 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி ...

மேலும்..

200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தனியார் துறையில் 200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள் என ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். தனியார் துறையின் ஊழியர்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும், இந்த விவகாரத்தை அமைச்சரவையில் ...

மேலும்..

ஊரடங்கு தளர்வு – சுகாதார கட்டுப்பாடுகளுடன் வழமைக்கு திரும்பும் மக்கள்

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், மக்களின் நாளாந்த நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. இதேநேரம் சுமார் 60இற்கும் மேற்பட்ட நாட்களுக்கு பின்னர் கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ...

மேலும்..

அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் – அனில் ஜாசிங்க கோரிக்கை

தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அரச தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மூன்று தசாப்த காலமாக ...

மேலும்..

2 மாதங்களின் பின்னர் யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நீர்கொழும்பு, அக்கரைப்பற்று, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 6 ஆம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த ...

மேலும்..