சிறப்புச் செய்திகள்

மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் ...

மேலும்..

முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்

நாட்டின் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது. புனித ரமழான் மாதத்தில் ...

மேலும்..

பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – ரிஷாட்டின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘கொவிட் – 19 ...

மேலும்..

யாழில் ஊரடங்கு வேளை பொலிஸார் மீது வாள்வெட்டு – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கையில் காயமடைந்துள்ளார். வலி.வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை ...

மேலும்..

கொவிட் பிரச்சினைக்கு மத்தியில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்திய – இலங்கை தலைவர்கள் இணக்கம்

சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்டநேற்று(சனிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இந்திய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி பரஸ்பர ...

மேலும்..

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் – ஜனாதிபதி வாழ்த்து

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கையின் இஸ்லாமியர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியில் மேலும் ‘உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நேற்று மொத்தமாக 21 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 89 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 660 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 420 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு தமிழ் மரபுக் காவலர் விருது வழங்கி கௌரவம்!

இணுவில் மண்பெற்றெடுத்த தமிழுக்குப் பெருமைசேர்த்து தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு கனடா தமிழ்ர் மரபு மாநாட்டு அமைப்பு ''தமிழ் மரபுக் காவலர்'' என்ற விருதை 2 ஆவது தமிழர் மரபு மாநாட்டில் வைத்து வழங்கிக் கௌரவித்துள்ளது. இணுவை மண் பெற்றெடுத்த பண்டிதர் ...

மேலும்..

செவ்வாய்க்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இயக்க திட்டம்

சுகாதார பிரவினரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இயக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ...

மேலும்..

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணை!

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கு விசாரணைகளில் ஏற்பட்ட தாமதங்களை தவிர்ப்பதை இதன் நோக்கமாகும். இதற்கமைய, எதிர்வரும் 30ம் திகதி சனிக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 13ம் திகதி ...

மேலும்..

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 33 கடற்படையினர் உள்ளிட்ட மேலும் 40 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு தொற்று உறுதியாகியவர்களில் 283 ...

மேலும்..

இராணுவ பதவி உயர்வுகள் தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா? – ஜஸ்மின் சூக்கா

இராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளானது, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் கூட இல்லை என்ற செய்தியையே அனுப்புவதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ ...

மேலும்..

இலங்கையர்களை அழைத்துவர பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டது விசேட விமானம்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானமொன்று பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானம் பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 1422 ...

மேலும்..

ஓமந்தையில் புதையல் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள்

ஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாரியளவிலான தேடுதல்  நடத்தப்பட்டது. எனினும் புதையல் எவையும் மீட்கப்படவில்லை. குறித்த காணியில் சில மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தலைமைகளே காரணம் – டக்ளஸ்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த கால தமிழ் தலைமைகளும் தற்போதைய தலைமைகளும்தான் காரணமாக உள்ளனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அலுவலகம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் வைபவ ...

மேலும்..